பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் * 148

பிற்காலத்தில் டி.கே.சி. சொன்னார்கள்: “ஐயரவர் கள் தமிழ் மகளின் நகை ஜாபிதாவை எடுத்துக்காட்டிய போது, அதாவது தலைக்குச் சூளாமணி, மார்புக்குச் சிந்தாமணி, கா து க் கு க் குண்டலகேசி, கைக்கு வளையாபதி, இடைக்கு மணிமேகலை, கடைசியாகக் காலுக்குச் சிலப்ப்திகாரம் என்று முடித்தார்களோ இல்லையோ, அப்படியே மயங்கிப் போய்விட்டேன்; அன்று இரவெல்லாம் ஒரே சொப்பனம்-தமிழ் அணங்கு வருவதும் தன் அ பூ ர் வ அணிகலங்களை இப்படியும் அப்படியுமாகத் திருப்பித் திருப்பிக் காட்டுவதுமாய்

இருந்தது.’

ரசிகமணி பி.ஏ, பி.எல்., பட்டமும் பெற்றவர்கள்) என்றாலும், அன்றைக்கு ஐயரவர்கள் தம் பேச்சின் இறுதியில், மாணவர்களுக்கும், கனவான்களுக்கும் ஒரு வார்த்தை, ஆங்கிலத்தைப் படிக்க வேண்டாமென்று நான் சொல்லவில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் படியுங்கள். ஆனால் தமிழுக்குத் தினம் அரை மணி நேரம் ஒதுக்கிவையுங்கள். கால்மணி நேரம் படித்தாலும் போதும்; பெரிய காரியம்’ எனத் தம் ஆர்வத்தை யெல்லாம் சேர்த்து ஒருமுனைப்படுத்திச் சொன்ன அறிவுரையை ரசிகமணி மறக்கவே இல்லை.

ஐயரவர்கள் தமிழ் மக்களைப் பார்க்கும்போதெல் லாம் தமிழ் படிக்கும்படி சதா தூண்டிக்கொண்டிருப் பார். தமிழ் படிக்கிறவர்களைக் க ண் டு வி ட் டா ல் கூத்தாடுவார். - -

இப்படி, தமிழுக்குத் த மி ழ ர் தா ன் கதி: தமிழர்க்கும் தமிழே கதி’ என்ற உண்மை ரசிகமணி டி.கே.சி. உள்ளத்தில் பதித்துவிட்டது. . . . . . ரசிகமணியின் அழைப்பு -

திருநெல்வேலியில் தமிழ் இலக்கியச் சங்கம் என்ற ம் ஒன்று இருந்தது. ரசிகமணியும் வேறு பல ரசிகர்

சேர்ந்து அதை நடத்தி வந்தார்கள்.