பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 - நாம் அறிந்த கி.வா.ஜ.

1928-இல் நடைபெற்ற அதன் ஆண்டு விழாவுக்கு ஐயரவர்களைத் தலைமை தாங்கும்படி ரசிகமணி டி.கே.சி., அழைத்திருந்தார். அவர் அடிக்கடி ஐயரவர் களை வந்து பார்ப்பதும் வழக்கம்: -

அந்த வேண்டுகோளுக்கு இணங்கி ஐ ய ர வர் க ள் திருநெல்வேலி சென்றார்கள். -

இவருக்கும் அவரோடு திருநெல்வேவி செல்லும் பாக்கியம் கிடைத்தது. - ; திருநெல்வேலி'தமிழ் இலக்கியச் சங்கத்தின் சார்பில் கம்பன் விழா 1928 ஏப்ரல் நாலு , ஐந்து தேதிகளில் நடைபெற்றது. அங்கிருந்து அழைப்பு வந்தவுடன், ‘நீரும் என்னுடன் வாரும். அப்படியே திருச்செந்துாரும் போய்வரலாம்’ என ஐயரவர்கள் இவரிடம் சொன்னார். இவர் முருகனை நினைந்து வாழ்பவர் என்பதை உணர்ந்தே அப்படிச் சொன்னார்.

திருநெல்வேலியில் பல வித்துவான்கள் இருக்கிறார் கள். என்னிடம் கல்லூரியில் பாடம் கேட்ட கனவான்கள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் பார்க்கலாம்’ என ஐயரவர்கள் சொன்னபோது இவருக்கு உற்சாகம் அதிக மாயிற்று. . . . . -

“பல தலங்களையும், காட்சிகளையும், நல்லவர் களையும் காணப்போகிறோம் என்ற காரணத்தால் இவரது உள்ளம் துள்ளியது.

திருநெல்வேலியில் ஐயரவர்களின் பேத்தியும், அவ. ளுடைய கணவரும் இருந்தார்கள். அவர்களது வீட்டில் இவர்கள் தங்கினார்கள், ! . . . இலக்கியச் சங்கத்தில் இவர் பாடிய அரிய வாழ்த்து - திருநெல்வேலி தமிழ் இலக்கியச் சங்கத்தாரின் விழா மிகவும் சிறப்பாக நடந்தது: ... - - . . . . .

அந்தச் சங்கத்தின் ஆண்டு நிறைவு விழாவில் ஒரு வாழ்த்து எழுதி வாசிக்கும்படி ஐயர்வர்களே இவரிடம்.