பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - 150

சொன்னது இவருக்கு மிகவும் உற்சாகம் அளித்தது. ஐயரவர்களிடம் பல பிரபந்தங்களை இவர் பாடங் கேட்டுக்கொண்டிருந்த காலமாதலால் இவருக்கு யமகம், திரிபு என்பவற்றில் கவனம் சென்றது.

எதையாவது படித்தால் அதேமாதிரி பாட வேண்டு மென்று இவர் எண்ணுவார்; பாடியும் விடுவார். அந்தப் பாட்டு இவருக்குச் சர்வசாதாரணமாக இருக்கும். ஆனால் ஐயரவர்களோ அதைக் கேட்டு அடையும் ஆனந் தத்திற்கு அளவே இல்லை. வாயார இவரது முயற்சியைப் பாராட்டுவார். ஐயரவர்களைப்போல் மாணவர்களைத் தட்டிக்கொடுத்து ஊக்கம் அளிக்கும் மகாபுருஷர்களை இனி எங்கே பார்க்கப் போகிறோம் என இவரது மனம் பிற்காலத்தில் ஏங்கியது இயல்புதானே!

யமகமும் திரிபும் அமையப் பாடும் ஆற்றல்

ஐயரவர்களின் கட்டளைப்படியே திருநெல்வேலி தமிழ் இலக்கியச் சங்கத்தின் ஆண்டு விழாவில் அந்தச் சங்கத்தை வாழ்த்தி ஐந்து பாடல்களை இவர் பாடினார்.

முதற்பாட்டு யமகம்; இரண்டாவது பாட்டு திரிபு: r மற்றப் பாடல்கள் இயல்பானவை. -

யம்கம், திரிபு என்பவை எதுகையின் வகையில் அமைந்த பெயர்கள். பாட்டில் ஒவ்வோர் அடியிலும் முதல்சீரும் மற்றும்எல்லா எழுத்துக்களும் ஒரேமாதிரியாக, இருந்தால் அதற்கு யமகம்’ என்று பெயர். முதலெழுத்து மாத்திரம் வேறாகவும்,மற்றவை ஒன்றாகவும் இருந்தால் “திரிபு என்று சொல்வார்கள். யமகம்’ என்பது வட சொல். மடக்கு’ என்பது யமகம்’ என்பதற்குரிய தமிழ் சொல். இப்போது யமகம்’ என்பது ஒவ்வோர் அடியிலும் சொல்லோ, தொடரோ வெவ்வேறு பொருள் தருவதாக அமைவதையே குறிக்க வழங்கப்படுகிறது. ஒரடிக்குள்ளே அவ்வாறு வருவதை “மடக்கு’ என்கிறார்கள். -

இவர் பாடிய முதற்பாட்டு ‘யமக மாக இருந்தது. தப் பாட்டின் ஒவ்வோர் அடியிலும் முதலில் “காவியங்.

&"