பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 - நாம் அறிந்த் கி.வா. ஜ;

கம்'*’ என்று அமையுமாறு இவர் பாடினார். பாட்டின் கருத்து இதுதான். -

குவளை மலரைப் போன்ற நிறம் ெப ற் ற திருமேனியை உடைய கருணைக் கடலாகிய இராம ணுடைய திருவிளையாடலைச் சுவை விளங்கும் படி அமைத்து ஒர் ஒப்பற்ற காவியத்தைக் கம்பனைப்போல் செய்தவர் யார்? அவனுடைய பெருமையை உணர்ந்து காதல் கொண்டார்கள்’ என்று பாட்டின் முற்பகுதியில் சொன்னார்; -

திருநெல்வேலி இலக்கியச் சங்கத்தார் கம்பன் விழாக் கொண்டாடுவதைப் பாராட்டிப் பாடிய பாடல் அல்லவா அது? - -

அதனால் அடுத்த இரண்டடியில் திருநெல்வேலியின் இயற்கை வளத்தை வருணித்தார்: r

“சோலைகளில் நடமாடுகின்ற அழகிய மயில்கள் ஆடவும், கரிய குயில்கள் பாடவும், தேனை உண்டு களிகொண்ட வண்டினங்கள் சிறிதும் மங்காத சுருதிக் கருவிபோல முழங்கும் ப்ொழில்களையுடைய திருநெல் வேலி’ என்றார். -

காவியங்கம் பொலிகருணைக் கடல்விளையாட் டினைச்சுவைகள் கவினப் பெய்தோர் காவியங்கம் பனைப்போல யாரளித்தார்? அக்கவியைக் காதல் செய்தார் காவியங்கம் மயில் ஆடக் கருங்குயில்கள்

இசைபாடக் களிவண் டர்மங் காவியங்கம் பலைசெய்யும் பொழில் கெல்லை

இலக்கியச் சங்கத்தார் அம்மா. (காவி-நீலோத்பலம். அங்கம்-உடம்பு. கவின-விளங்க, கா-சோலை. களி-களிப்பு. வண்டர்-வண்டு. இயம்-இசைக் கருவி) - x

  • வினாக்கள் - விடைகள் எண் 41- கி.வா.ஜ.