பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் ”

அந்தப் பாடல்களை இவர் அந்த விழாவில் படித்த போது திருநெல்வேலித் தமிழன்பர்கள் பலரும் இவரை வாயாரப் புகழ்ந்து பாராட்டினார்கள். பாட்டில் கடின மான சொல்லோ, வலிந்து பிரிக்க வேண்டிய தொடரோ இல்லையெனச் சொல்லிப் பலரும் புகழ்ந்தார்கள்து

அந்தப் பாராட்டுதல்களைக் கேட்ட இவருக்கு. உண்டான மகிழ்ச்சியைவிட ஐயரவர்களுக்கு உண்டான மகிழ்ச்சிதான் அதிகம் என்று சொல்லவேண்டும். செந்திலாண்டவன் தரிசனம்

திருநெல்வேலியில் கம்பன் விழா முடிந்தவுடன் இவர் கள் திருச்செந்துார் சென்றார்கள். இவர் அதுவரைக்கும் திருச்செந்தூரைப் பார்த்ததில்லை. -

திருச்செந்துாரில் மு. ரு க ன் ஆறுமுகங்களோடும், பன்னிரு கரங்களோடும் தங்கியுள்ளான். சூரசங்காரம் ஆனவுடன் வெற்றிக் கோலத்துடன் அவன் வந்து தங்கிய இடமாதலின் அதற்கு ‘ஜயந்தி’ என்ற திருநாமம் வந்தது: அதுவே செந்தி, செந்தில், செந்தூர் என மாறி வழங்கும். என்பர், w -

முருகனின் திருக்கோவில், கடல் அலைகள் மோதும். இடத்திலே அமைந்திருத்தலின் திருச்செந்தூருக்கு அலை வாய்’ என்பது பழைய பெயர்.

‘உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர்

அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே’ எனத் திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் கூறுவார்.” - சங்ககாலத்து நூல்களைப் பத்துப்பாட்டு’, எட்டுத் தொகை என்றும், பதினெண் கீழ்க்கணக்கு என்னும் நூல்களைச் சங்க மருவியன என்றும் சொல்லுவார்கள், பத் துப் பா ட் டின் முதற் பாட்டாக இருப்பது ‘திருமுருகாற்றுப்படை. - -- வழிகாட்டி-திருமுருகாற்றுப்படை விளக்கம்கி.வா.ஜ.

4.