பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 நாம் அறிந்த கி.வா.ஜ.

சங்க நூல்களுள் பத்துப்பாட்டைத் தாம் காணவும், பதிப்பிக்கவும் கிடைத்த வாய்ப்பை ஐயரவர்கள் அன்று இவருக்கு எடுத்துச் சொன்னார், ஆசானின் ஆராய்ச்சித் திறமை

ஐயரவர்கள் 1887-இல் சீவக சிந்தாமணி'யைப் பதிப்பித்து வந்தபோது அதன் உரையில் காட்டப்பெற்ற மேற்கோள்கள் எந்த எந்த நூல்களில் இருக்கின்றன என்கிற ஆராய்ச்சியில் ஈ டு பட் டார் . பழைய உரையாசிரியரான நச்சினார்க்கினியர், எ ன் றார் பிறரும்’ என்றே சுட்டிக் காட்டிப் போயிருந்தார்.

ஐயரவர்கள் சிந்தாமணியைப் பதிப்பிக்கையில் உரையில் வரும் மேற்கோள்களுக்குரிய ஆதாரங்களை அடிக்குறிப்பில் காட்டி வந்தார். எல்லா மேற்கோள் களுக்கும் அப்படிக் காட்டிட இயலவில்லை.

ஒரு நாள் இரவு தூக்கம் வராமல் தம்மிடம் இருந்த பழைய ஏட்டுச் சுவடிகளை எல்லாம் பு ர ட் டி ப் பார்த்தார் ஆரம்பமும், முடிவும் இல்லாத ஏடு ஒன்று அகப்பட்டது. அதையும் பொறுமையாகப் படித்துப் பார்க்கையில் சிந்தாமணி'யில் காட்டப்பெற்றிருக்கும் பல மேற்கோள்களுக்கு ஆதாரம் தெரிந்தது. அந்த ஏடு பிள்ளையவர்களுடையது. - -

‘அடடா! இதுகாறும் இதனை நாம் ஊன்றிக் கவனிக்கவில்லையே’ என வருத்தி மேலும் அதைப் ப டி த் தார் ஐயரவர்கள். பொருநராற்றுப்பன்ட்”, “சிறுபாணாற்றுப்ப்டை’, ‘முல்லைப் பாட்டு’, ‘மதுரைக் காஞ்சி’ என ஒவ்வொன்றாகப் புலப்பட்டது. - ஐயரவர்களுக்குப் பத்துப்பாட்டு ஏட்டுச்சுவடி கிடைத்தமை ஒன்றைத் தேட மற்றொன்று அகப்பட்டாற்போல, இப்படித்தான் ஐயரவர்கள் சங்கத்தமிழ்ப் பத்துப் பாட்டை’க் கண்டு கொண்டார்;

நா-10