பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 நாம் அறிந்த கி.வா.ஜ: தாகஸ்வர இசை கேட்கவே, அவர்கள் வாயிற்புறம் வந்தார்கள். - . . . .

முருகபக்தர் ஒருவர் காவிரியில் நீராடி, விபூதியைப் பூசிக்கொண்டு உடம்பெல்லாம் அலகுடன் பாற்காவடி எடுத்து வந்தார். அவர் முருகனது திருப்புகழைப் பாடத அவரது பாட்டுக்கும் ஆட்டத்திற்கும் ஏற்ப நாகஸ்வரக் காரர். நாகஸ்வரம் வாசித்து வந்தார். நல்ல சகுனமாக’ அமைந்த அந்தக் காட்சி, ஐயரவர்களை மெய்சிலிர்க்க வைத்ததாம்... - - .

இந்தச் செய்தியை ஐயரவர்கள் சொல்ல, இதனைக் கேட்டு வந்த அன்பர் கி.வா.ஜ-வுக்கும் கண்களில் நீர் துளித்தது. தாம் காந்தமலையானுக்குப் பாற்குடம் எடுக்கும் காட்சி இவரது நினைவுக்கு வந்தது. -

- “திருச்செந்துார் முருகனை நம் வாழ்வில் முதன் முதலாகத் தரிசிக்கப் போகிறோம் என்ற எண்ணத்தில் இவருக்கு ஒரு புதிய கிளுகிளுப்பு உண்டாயிற்று.

கோவிலுக்குப் போகும் வழியில் இப்போது பாதை போட்டு மேலே கொட்டகை போட்டிருக்கிறார்கள்: அப்போது கொட்டகை இல்லை : மணலில்தான் நடந்து போக வேண்டும். -

அப்படி மணலில் நடந்துபோகும்போது ஐயரவர்கள், “நீரும் செந்திலாண்டவன்மீது ஏதாவது செய்யுள் சொல்லும் எனக் கட்டளையிட்ட்ார்: -

இவர் சேந்தமங்கலத்திலிருந்து சிதம்பரத்திற்கு முதன்முதலாக ஐயரவர்களைப் பார்க்க வந்தபோது கையுறையாக எதுவும் கொண்டு வரவில்லை. -

அவரிடம் பாடம் கேட்பதற்காகச் சென்னையில் அவரது வீட்டிற்குச் சென்ற சமயத்திலும் ஒன்றும் வாங்கிப் போகவில்லை. இவரை அழைத்துக்கொண்டு வந்த மற்றவர்களுக்கும் அந்த எண்ணம் தோன்றவில்லைg