பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 156.

இவர் ஐயரவர்களோடு இருந்த சில மாதங்களில் அவரைக் காண வருகிறவர்கள் எல்லோரும் மலர், பழம், கற்கண்டு முதலிய பண்டங்களைக் கொண்டு வந்து. கொடுப்பதைப் பார்த்தபின் இவரது மனத்தில் மிக்க வ்ருத்தம் உண்டாயிற்று.

மனத்தை ஏதேனும் ஒன்று வருத்தும்போது, தம் அறிவினால் அதற்கு வேறு ஒரு சமாதானம் கண்டு, தம். துயரத்தைத் தாமே துடைத்துக்கொள்வது சிறு வயது முதலே இவருக்கு வழக்கம். எனவே, ஐயரவர்களிடம் நான் என்னையே காணிக்கையாக ஆக்கிக்கொண்ட பிறகு பழம் முதலியவை எதற்கு?’ என்று ஒருவாறு தம் வருத்தத்தை மாற்றிக்கொண்டார். - செந்திலாண்டவனின் சங்கிதியில்

அன்று செந்திலாண்டவனைத் த்ரிசனம் செய்து கொண்ட பிறகு இவரும் சில பாடல்களை அவனது சந்நிதானத்தில் பாடவேண்டுமென்று நி ைன ந் தே வந்தார். 3.

இறைவனுடைய தரிசனத்திற்குப் போகும்போதே ஐயரவர்கள், ‘முருகன் மீது பாடும்’ என்று சொன்ன வுடன், இவரது உடம்பு புல்லரித்தது. ‘பாடலைக் காணிக்கையாகக் கொண்டுபோக வேண்டும்’ என்று தம் ஆசிரியப்பிரான் உணர்த்துவதுபோல இவருக்குத் தோன்றியது. . . . . .

ஆசான் இட்ட கட்டளை, அவரது பேரன்பு, முருகன் பால் இவருக்குள்ள ஈடுபாடு மூன்றும் துணை செய்ய, மூன்று வெண்பாக்களை உடனே பாடினார். மூன்றும் திரிபு, யமகம் கலந்த பாடல்களேயாகும்.

முதற் பாடலில், ‘முருகன் எல்லாம் அறிந்தவன். சர்வஜ்ஞன். ஆனாலும் அவன் அறியாதது ஒன்று உண்டு முருகன் அறியாதது என்ன? அதுதான் பிறவித் துயர்: ‘ ஆவுன் அறியாததை நான் நன்கு அறிவேன் என்னைப்