பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 - . நாம் அறிந்த கி.வா.ஜ3

போல் பலரும் அறிவார்கள். அப்படி அறிந்தவர் கூட்டத் தில் நான்தான் முதல்வனாக இருப்பேன். என்ன என்ன பிறவி எடுத்தாய் என்று கேட்டாலோ எளிதில் தெரியாத சிறிய உயிர்களான புழு, பூச்சி, ஊர்வன இப்படிப் பல பிறவிகள் எடுத்திருக்கிறேன். இந்த விஷயத்தில் முருகன் அறியாததை நான் அறிந்தாலும் அதனால் பெருமை அடையவில்லை. இப் ப டி ச் செனித்தது போதும். இனிமேல் செந்துார் முருகனது அருள்தான் வேண்டும்” என்ற கருத்து அமைந்தது முதற் பாட்டு, முருகனையே பார்த்துச் சொல்வதாக இது அமைந்தது: r

‘சுற்றும் பிறவிப் பிணியறியாய் நீ; அதனை

முற்றும்.உணர்ந்தவரில் முன்னவன்யான்-சிற்றுயிர்

கொள் செந்தூர் வனமுதலாய்ச் சென்மித் ததுபோதும்; செந்தூர் முருகஅருள் செய்.’ (மூன்றாம் அடியின் முதலிலுள்ள செந்தூர் என்பதை செந்து ஊர் எனப் பிரிக்கவேண்டும்) -

இப்படியே மற்ற இரு பாடல்களும் இருந்தன:

‘காலமெல்லாம் கைப்பொருளில் கண்ணாய்க் -

- - கழித்துவிட்டால் காலன்கைப் பாசத்தில் கட்டுண்டு-மேலிவர்போ(து) அங்கங்த மாதனத்தால் ஆம்பயன் என் போற்றிடுக. அங்கங்த மாதனத்தா னை,’ -

‘அஞ்சுமலர் மாலை அலரா தவன்கடம்பு

விஞ்சமலர் மாலைபெற்று மேவுவாய்-கெஞ்சமே செந்தினகரன்போல் செழுஞ்சுடர்வி சுங்கதிர்வேல் செந்தினகர் அன்பால்நீ சென்று.” இந்தப் பாடல்களைக் கேட்டவுடன் ஐயரவர்கள், “திரிபு யமகத்தோடு பாடினாலும் பொருள் விளங்காத படி இல்லை. எளிதில் விளங்கும்படி நன்றாக இருக்