பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 59 - - நாம் அறிந்த கி.வா.ஜ.

ஐயரவர்களுடன் பேசி வருகையில் தம் வீட்டுப் பழக்கத்தால் அவரை, நீ” என்று சொல்லிவிட்டார்

ஐயரவர்கள் எப்போதும் ஒன்று நன்றாக இல்லை யென்றால் “அது நன்றாக இல்லை’ எனச் சொன்ன தில்லை. இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என அறிவுறுத்துவதே வழக்கம்: . . . .

தம்மைவிட வயதில் சிறியவர்களைக்கூட டா, டீ.நீ” போட்டு அழைக்கும் வழக்கம் அவரிடம் இருந்ததே இல்லை. - : -

இவர் அவரை ‘நீ எனச் சொன்னவுடன் ஆமாண்டா’ என்று அவரும் மெல்லத் தலைநிமிர்ந்து சொன்னார்.

சட்டென்று இவர் தம் பிழையை உணர்ந்தார். கீழே விழுந்து ஐயரவர்களை வ்ணங்கி, “வீட்டில் உறவினர் களுடன் பேசிவந்த பழக்கத்தால் நாத் தவறித் தங்களிட மும் ‘நீ என்று சொல்லிவிட்டேன். மன்னிக்கவேண்டும்’ என்று கண்ணிர் மல்கச் சொன்னார்;

ஐயரவர்களோ, எழுந்திரும், உம்மைக்கூட நான் உறவாக நினைத்துத் தான்.சொன்னேன்.அதனால் என்ன? உட்கார வேண்டும்’ என்றார். - -

இந்தச் சம்பவம் நடந்தவுடன், ஐயரவர்களுடன் தாமாக எதையும் கேட்கும் துணிவே இவருக்கு இல்லா மற் போய்விட்டது. -

ஒரு நாள் பேராசிரியர் சுந்தரமையர் ஐயரவர்களிடம் வந்தார். அவர் ஐயரவர்களிடம் தாம் பாடம் கேட்க விரும்புவதாகச் சொன்னார். -

ஐயரவர்களுக்கோ பாடம் சொல்வது என்பது மிகவும் விருப்பமான செயல்; அந்தப் பேராசிரியரிடம், ‘பாடம் கேட்கலாமே; அப்படியே சொல்கிறேன்’ என்று சொன் னார். - -

  • 5-5-1928: உ.வே.சாமிநாதையர் குறிப்பு.