பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161 . நாம் அறிந்த கி.வா.ஜ.

சொல்லத் தெரிவதில்லை. மரம் சாய்ந்தது; இரண்டும் சேர்ந்தால் மரஞ்சாய்ந்தது’ என்று ஏன் வரவேண்டு மென்று கேட்டால் மயங்கி நிற்கிறார்கள். காரணம், தேர்வில் வினாவாக வரக்கூடியதை மட்டும் படிப்பது, எதிலாவது சுவை-கண்டால் அதைமட்டுமே படிப்பது என்பதுதான். சாதம் சாப்பிடாமல் இனிப்பான தின் பண்டங்களையே தின்னும் குழந்தைக்கு எப்படி உடம்பு தேறும்? சாப்பாடு என்றால் அன்னம், காய்கறி, குழம்புகு ரசம், தயிர் என்று எல்லாமே வேண்டும். உணவு தெவிட் டாதிருக்க ஊறுகாய்கூட வேண்டித்தான் இருக்கிறது. படிப்பது என்றால் சிறிய நூல், பெரிய நூல், சங்க நூல்கு பிற்காலத்து நூல், காவியங்கள், புராணங்கள் என்கிற வேறுபாடு இல்லாமல் எல்லாமே தண்டமிழ்த் தாயின் அணிகலன்கள் என்கிற உணர்வோடு படித்துச் சுவைத்து இன்புற வேண்டும். அப்போதுதான் தமிழில் நல்ல புலமையும், பழக்கமில்லாத எந்தப் புதுப்பாட்டையும், பிரித்துப் பொருள் கூறும் ஆற்றலும், பல சொற்களின் பொருளும் தெரியும். நல்ல தமிழ் இலக்கண இலக்கிய வன்மை பெறவேண்டுமென்றால் சில்லறைப் பிரபந்தங் கள் பலவற்றையும் படிக்க வேண்டும். இந்த அறிவுதான் காவியச் சுவையை முற்றும் நாமே உணர்ந்து அநுபவிக்க அதுகூலமாக இருக்கும்’ என ஐயரவர்கள் சொன்னார்.

அதன் பிறகுதான் இவருக்கும் உண்மை விளங்கியது. ஒவ்வொரு தமிழ்ப் புலவரும் கற்க வேண்டிய கருவி நூல்*

  • பண்டைக்காலம் தொடங்கித் தமிழ் பயிலும் மாணவர்கள் முதலில் சிறு நூல்களைக் கற்றல் வழக்க மாக இருந்தது. அந்தாதி, சில்ேடை வெண்பா, மாலை, கலம்பக்ம், கோவை, மடல், பரணி என்பனவற்றை ஒன்றன்பின் ஒன்றாகப் படித்து வருவார்கள். தமிழில் அடிப்படை உணர்ச்சி வருவதற்குப் பிரபந்தங்கள் உதவி யாக இருத்தலின் அவற்றை வித்துவான்கள் கருவி நூல்கள்’ என்று வழங்குவர். .