பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் . 162

களாகிய சிறு சிறு பிரபந்தங்களை ஐயரவர்கள் பாடம் சொன்னபோது இவர் அவற்றையெல்லாம் மிகவும் விருப் போடு கற்கத் தொடங்கினார். - -

சென்னையில் சிக்கன வாழ்வு ,

சென்னையில் இவர் மிகவும் சிக்கனமாகத்தான் இருந் தார். என்றாலும் கையில் கொண்டுவந்த பணம் இந்த நான்கைந்து மாதங்களில் கொஞ்சங் கொஞ்சமாகச் செலவாகிவிட்டது. கடிதங்கள் எழுதுவது, பழைய புத்தகங்களை வாங்குவது போன்றவற்றுக்கே அதிகப்

பணம் செலவாயிற்று.

சேந்தமங்கலத்தில் இருந்தபோது தம் பெற்றோர் களுக்கு இவரால் ஒரளவு உதவ முடிந்தது. சென்னை வந்த பிறகு தம் குடும்பத்திற்கு இவரால் பணம் ஏதும் அனுப்ப முடியவில்லை. அது ஒரு பக்கம் வேதனையாக இருந்தது. இந்த நிலையில் தம் செலவுக்குப் பணம்கேட்டு ஊருக்குக் கடிதம் எழுத விரும்பவில்லை. - .

சேந்தமங்கலம் ஜமீன்தார் ஐராவத உடையாரும் இந்த நான்கைந்து மாதமாக மாதந்தோறும் 20 ரூபாய் அனுப்பி வந்தார். இவருக்குப் பணமுடை இருந்தபோதும் தொடர்ந்து சேந்தமங்கலம் ஜமீன்தாரது உதவியைப் பெற்றுவர இவரது நெஞ்சம் நானுற்றது.

தந்தையைக் காட்டிலும் தம்மிடம் மிக்க அன்பு காட்டி வரும் ஐராவத உடையாருக்கு அதற்கு முந்திய மாதம் கடிதம் எழுதியபோது, “இதுகாறும் தாங்கள் எனக்குச் செய்து வந்துள்ள உதவிகளே அதிகம். இனி மேலும் தாங்கள் எனக்குப் பணம் அனுப்ப வேண்டாம். தேவைப்படின் நானே தங்களுக்கு எழுதுகிறேன் ஐயரவர் கள் எனக்கு எல்லா உதவிகளும் செய்கிறார்; அவரது வாழ்வு நெடுந்தமிழ் வாழ்வு. அவருக்குச் செய்யும் தொண்டே நிலைத்த தமிழ்த் தொண்டு. நீங்கள் என்னை