பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - 176

களும் ஐயரவர்களது வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந் தார்கள்.

தமக்கு ஒரு பேரன் இருப்பதையும், அவன் மிக அழகாக இருப்பான் என்பதையும், அவன் படித்துக் கொண்டிருப்பதையும் சொல்லி, அவர்களின் பெண்ணைத் தம் பேரனுக்குத் திருமணம் செய்துகொள்ள விரும்புவ தாகத் தெரிவித்தார். அவர்களும் உடனே சென்னை வந்து பிள்ளையைப் பார்ப்பதாகச் சொன்னார்கள்.

ஐயரவர்கள் அந்தப் பெண்ணைப் பாடச் சொல்லிக் கேட்டார். அவள் சில சுலோகங்களையும், தியாகராஜ கீர்த்தனை ஒன்றையும் இனிமையாகப்பாடினாள்.தமிழ்ப் பாடல் எதுவும் பாடவில்லை.

‘குழந்தே, உனக்குத் திருக்குறள் தெரியுமோ?’ எனக் கேட்டார். தெரியாது’ என அந்தப் பெண் தன் தலையை அசைத்தாள். o “.

‘திருக்குறள் தெரியாத ஒரு பெண் என் வீட்டுக்கு மருமகளாக வரமுடியாதே 1’ என ஐயரவர்கள் கொஞ்சம் வருந்துவதுபோலச் சொன்னார்.

“அதைப் படிக்கச் சொல்லாதது எங்கள் தப்புத் தான். நாளைக்கே இவளுக்கு ஒரு திருக்குறள் புத்தகம் வாங்கித் தருகிறேன். சீக்கிரமே அதை மனப்பாடம் செய்துவிடுவாள்’ என வீட்டிலிருந்தவர் சொன்னார்.

“ஆமாம். தினமும் நீயும் கொஞ்சம் கொஞ்சம் திருக் குறளையும் படித்து வரணும்’ என ஐயரவர்கள் அன்பு இழையோட அந்தப்பெண்ணிடம் கூறினார்.

ஐயரவர்கள் மாயவரத்தில் இருந்தபோது பந்தல் பாடப் பூமியில் அடித்திருந்த முளைக் கொம்பு ஒன்று இடர, கால் இசகுபிசகாகச் சுளுக்கிக்கொண்டது. மிகுந்த சிரமத்துடன், சென்னை தியாகராஜ விலாசம்’ வந்தார்) டாக்டர் வந்து அவரது காலுக்குப் பிளாஸ்திரி போட்டுச் சென்றார். - -