பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175 நாம் அறிந்த கி. வா. ஜ.

கொஞ்சம் பூஜைக்குப் பறித்து வருவார். இதை அந்த வீட்டில் இருந்த ஒரு சின்னப் பெண் பார்த்து வந்தாள்

‘தினமும் இந்தத் தாத்தா எல்லாப் பூக்களையும் பறித்துக்கொண்டு போய்விடுகிறாரே என நினைத்தாள் போலும்! *

மறு நாள் ஐயரவர்கள் வருவதற்குள் , எ ல் ல ள ப் பூக்களையும் பறித்து உள்ளே கொண்டுபோய் வைத்து விட்டாள். ஐயரவர்கள் அந்த வீட்டிற்கு வந்தபோது செடியில் ஒரு பூக்கூட இல்லை; அவருக்கே ஆச்சரியமாக இருந்தது!

அந்தப் பெண்ணின் தாயார் அந்தச் சமயம் தம் பெண்ணிடம் என்ன சொன்னாளோ தெரியாது, அந்தப் பெண், தான் பறித்து வைத்திருந்த பூக்களில் கொஞ்சம் எடுத்து வந்து, “இந்தாங்க தாத்தா, பூ’ என இவரிடம்

கொடுத்தாள்; - - -

மறு நாளும், அதற்கு அடுத்த நாளும் இதேபோல அந்தப் பெண் செய்ததை ஐயரவர்கள் கவனித்தார்.

‘நாலணா கிடைத்தால், ஒரணாவைத் தானே பிறருக்குக கொடுத்துவிட்டு மற்றதை மிச்சம் செய்து கொள்கிற சாமர்த்தியம் உடைய பெண்ணாக இருக்கி றாளே!’ என வியந்தார். -

அடுத்த நாள் அந்தப் பெண்ணிடமே, பேஷ், நீ மகா கெட்டிக்காரியாக இருக்கிறாயே! எனக்கு ஒரு பேரன் இருக்கிறான்; அவன் மகா அசடு. அவன்ை நீ கல்யாணம் பண்ணிக்கொள்கிறாயா?” என வேடிக்கை யாகக் கேட்டவுடன், அந்தப் பெண் வெட்கப்பட்டுக் கொண்டு தன் வீட்டிற்குள் ஓடிவிட்டாள். “ις -

ஐயரவர்கள் அந்தப் பெண்ணை விடுவதாக மறு நாள் அவரே அவளது வீட்டிற்குள் சென்றார். அவர் இன்னவர் என்று தெரிந்தபோது அந்தப் பெண்ணின் பெற்றோர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர்