பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் . 174

தன்றாகக் கோவில்,குளம், சந்நியாசிகள் என்று அங்கங்கே போய்ச் சுற்றிப் பார்த்துக் கொண்டிரு: எனப் படபடப் பாகத் தாயார் சொன்னார்:

இவர் தம் தாயாரின் முகத்தை அந்த நேரம் நிமிர்ந்து பார்த்தார் அவருடைய கண்களில் நீர் முட்டி நின்றது. தாம் முன்னுக்கு வரவேண்டும் என்ற ஆதங்கத்துடன் துடிக்கிற தாயின் மனம் புண்படும்படி பேசிவிட்டதை நினைத்து இவர் மிகவும் வருந்தினார்?

‘சென்னைக்குப் போகப் பணத்திற்குத்தான் ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறேன், அபயானந்தர் சென்னை யில் தமக்கு வேண்டிய அன்பர்கள் சிலர் இருப்பதாகச் சொன்னார். “நான் அவர்களுக்குக் கடிதம் தருகிறேன். அதைக் கொண்டுபோய்க் கொடுத்து அவர்களைப் பார். ஒவ்வொரு மாசமும் அவர்கள் உனக்குப் படிக்கப் பண உதவி செய்வார்கள்’ என்றார். அவரிடமிருந்து கடிதம் வாங்கி வரத்தான் அவரைப் பார்க்கப் போயிருந்தேன்” என இவர் சொன்னவுடன், “அதை மு ன் பே சொல்லுவதற்கென்ன?’ எனச் சொல்லி அன்று. இவருடைய தாயார் சமாதானம் அடைந்தார்.

இதற்குள் இவர் மோகனூர் வந்து மூன்று மாதங் களுக்குமேல் ஆகிவிட்டன. விடுமுறை முடிந்தவுடன் பள்ளிக்குப் போக மனம் வராமல் சிணுங்கும் சிறு குழந்தையை அதன் தாய் பார்ப்பதுபோல் இவருடைய தாயாரும். இவரை வெறுப்போடு பார்த்து வந்தார். உடனடியாக இவரைச் ,சென்னைக்கு அனுப்பிவைக்க அவருக்கு வழி தெரியவில்லை. மாயவரத்தில் ஆசான் கண்ட சிறுமி . .

இதன் நடுவில் ஐயரவர்கள் திருப்பனந்தாள், திருவா வடுதுறை சென்றுவிட்டு மாயவரம் வந்து தங்கியிருந்.

மாயவரத்தில் அவர் தினமும், காலையில் உலாவிப் போகும்போது ஒரு வீட்டில் பூத்திருந்த பூக்களைக்