பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 நாம் அறிந்த கி.வா.ஜ3

ஐயரவர்களோ தாம் போகும் இடங்களிலிருந்தெல் லாம் இவரது உடம்பைப்பற்றி விசாரித்து, படிக்கச் சென்னைக்கு எ ப் போது வர இருக்கிறீர்கள்? எனக் கேட்டுக் கடிதம் எழுதினார். .

ஒரு நாள் காலையில் அபயானந்தரைப் பார்க்கப் போன இவர், மாலையிலேதான் வந்தார். அபயானந்தர் அப்போது (சேலம் மாவட்ட்) வேலூருக்குப் பக்கத்தில் இருந்த ஒர் ஊரில் இருந்தார். .

அன்று இவர் விடு திரும்பியவுடன் ஐயரவர்களிட மிருந்து வந்த கடிதத்தை இவருடைய தாயார் இவரிடம் கொடுத்தார். இவர் அதனைப் படித்தவுடன், ஏண்டா, பெரியவருக்கு என்ன கடிதம் எழுதப் போறே? எப்போது சென்னைக்குப் போக உத்தேசம்’ என்று சர்வசாதாரண மாகத்தான் கேட்டார். தாயார். .

இவருக்கு என்னவோ கோபம் வந்துவிட்டது. ‘சென்னைக்குப் போனால் சாப்பாட்டுக்கு என்ன செய்வது? ஒவ்வொரு மாசமும் அப்பா பணம் அனுப்புவாரா? இல்லை, நான் அங்கே இருக்கி இந்த நான்கைந்து மாதங்களில் பனம் வேண்டுமா என்று கேட்டாவது ஒரு கடிதம் எழுதினாரா? சொல்லுங்கள்’ மிக் ரிச்சலோடு கேட்டவுடன். இவரு-ை” தந்தையாரே அதிர்ந்து போனார். .

தம்மால் முடியாத ஒன்றை முடியும் எனத் தந்தைய ரால் சொல்ல முடியவில்லைடு . . 3

“அவராலே ஒவ்வொரு மாசமும் பணம் அனுப்பமுடி யாது. சென்னையிலிருந்து உன்னை அழைத்து வந்துவிட் டாரே தவிரச் சென்னைக்கு உன்னைப் படிக்க அனுப்ப அவரால் முடியாது. நாளுக்கு நாள் இந்த ஊரில் நாங்கள் குடும்பம் நடத்துவதே திண்டாட்டமாக இருக்கிறது: அவ்ர் எங்கே உன்னைப் படிக்கப் போ’ என்று சொல்லப் போகிறார்? உனக்கும் ப்ோகிற உத்தேசம் இல்லை