பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 17s.

காந்தமலை யானைத் தரிசனம் செய்துகொண்டு இவர் 1928 ஆகஸ்ட் 19-ஆம் தேதி சென்னைக்குக் கிளம்பினார்டு

தாயார் தாம் சேர்த்து வைத் திருந்த பதினேழு . “ரூபாயை ரெயில் செலவுக்காக இவரிடம் கொடுத்து ஆசி வழங்கி அனுப்பினார்: . . இவர் மோகனூரிலிருந்து சேலம் போய், அங்கிருந்து சென்னைக்கு 20-ஆம் தேதி காலையில் வந்து சேர்ந்தார்;

இவரைக் கண்டவுடன் ஐயரவர்களுக்குத் தம் உயிரே திரும்பி வந்தது போல இனித்தது: அன்றைய தினமே இவருக்குச் சிவஞானபாலைய தேசிகர் பிள்ளைத் தமிழைப் பாடம் சொல்லத்தொடங்கினார்:சங்கத்தமிழ் அங்குறுநூற்றிலிருந்து 20பாடல்கள் பாடம் சொன்னார்.

மிகவும் வெப்பமான காலத்தில் குளிர்ந்த தென்றல் வீசினால் நமக்கு எவ்வளவு ஆனந்தம் உண்டாகிறது: அப்படியே இவரும் இசையோடு தமிழ்ப் பாடல்களைப் படிக்கும்போது ஐயரவர்களுக்கு உண்டாகும் ஊக்கத் திற்கு அளவிராது. ஆகா, என்ன வாக்கு, என்ன வாக்கு, ஜிலுTவென்று காதில் விழுகிறது என்பார். அவ்வளவு இனிமையாக அநுபவிப்பவர்களை வேறு எங்கும் காண முடியாது! .

அவரும் பாடம் சொல்லும்போது தமிழ்ச் செய்யுட் களை இசையுடன் சொல்லிக் காட்டுவார்.

இப்படி ஐயரவர்கள் இவருடைய செவிக்கு உணவு அளித்ததோடு. மாதந்தோறும் இவரது சாப்பாட்டுக்கு ஆகும் உணவு விடுதிச் செலவை, அந்த மாதம்முதல் rற்கத் தொடங்கினார். . . -

இதனைப் பிற்காலத்தில் இவர் சொல்லும்போது மாணிக்கவாசகரைப் போல், “நான் யார்? என்னுள்ளம் ஆர்? ஞானங்கள் ஆர்? என்னை யார் அறிவார், ரீமத்