பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 79 நாம் அறிந்த கி.வா.ஜ. ஐயர்பிரான் என்ன்ை 4G?” என மிக்க

நன்றியுணர்வோடு, தம் கண்ணிரை முத்தாக்கி உகுப்பார்டு

ஐயரவர்களிடம் இவர், தமிழ்ப் பெருமலையின் சாரலிலே அகத்திய முனிவரைப்போல அமர்ந்து தமிழ். கற்றுத் தமிழின்பம் பெற்று ஆராய்ச்சி செய்யவும் பயிற்சி பெறத் தொடங்கினார்.

ஐயரவர்களின் அ ன் புக னி ந் த திருவுள்ளமும், மென்மை நயம் கொழிக்கும் இன்சொல்லும் இவரைப் பிணைத்தன. அவர் யாவரையும் அன்போடு வரவேற்றுப் பேசி இன்புறுத்தும் சாதுர்யம், இவரது உள்ளத்தில் பதியத் தொடங்கியது. அவரோடு இருந்து வந்த இவருக்குச் சைவ மடங்களோடும். குரு மகாசந்நிதானங் களோடும் பழகுகிற வாய்ப்பு அவ்வப்போது கிடைக்க லாயிற்று. .

தமிழ் விடு தூது பதிப்புப் பணியில் ஈடுபாடு

மா யூ ர நா த ர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஐயரவர்கள் போகும்போது இவரையும் தம்முடன் அழைத்துச் சென்றார்: புறப்படும்போது “தமிழ்விடு து.ாது ஏட்டுப் பிரதியையும் எடுத்து வைக்கும்படி சொன்னார். - - -

“தமிழ் விடு தூது’ நூலின் சுவடி ஒன்றே ஒன்றுதான் ஐயரவர்களுக்குக் கிடைத்தது; வேறு பிரதி. எங்கேனும் கிடைக்குமா என்று அவரும் பலகாலம் தேடிப் பார்த்தா ராம். கிடைக்கவில்லை. இந்த மூலப் பிர தி ைய வைத்துக்கொண்டே நூலினைப் படித்து ஆராய்ந்து பதிப்பிக்க ஐயரவர்கள் எண்ணினார்.

“தமிழ் விடு தூது 268 கண்ணிகளே அமைந்த சிறு நூல்.மதுரைப் புழுகுநெய்ச் சொக்கரிடம் தன் மனத்தைச் சொக்கவிட்ட பெண் ஒருத்தி அவரது அருளைப் பெறும்