பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - 180

பொருட்டுத் தமிழையே துளதாக அனுப்புவதாக ஒரு

புலவர் பாடியிருக்கிறார்.

2-9-1928 அன்று மாயூரநாதர் கோவில் கும்பாபி ஷேகம் சிறப்பாக நடந்தது. நல்ல கூட்டம், திருவாவடு துறை ஆதீன ஞானாசிரியர் முன்நின்று அந்தக் குடமுழதகு விழாவை நடத்தி வைத்தார். இவர்கள் மாயூரத்தில் இரண்டு மூன்று நாட்கள் தங்கியிருந்தார்கள்)

இந்தச் சந்தர்ப்பத்தில், தமிழ்விடு தூதை நான் ஒரு முறை பாடம் கேட்கிறேனே?’ என இவர் ஐயரவர்க வரிடம் விண்ணப்பித்துக்கொண்டார். “அ ப் ப டி ேய செய்யலாம் என அவரும், இவருக்குப் பாடம் சொல்லி வந்தார்: •

இடையில் கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த சிவா சார்யர்கள் சிலர், ஐயரவர்களைக் காண வந்தார்கள். அவர்களோடு பேசும்போது ‘தமிழ் விடு தூது நூலின் 231-ஆம் கண்ணிமுதல் சில கண்ணிகளைப் படிக்கும்படி ஐயரவர்கள் இவரிடம் சொன்னார். அவற்றில் அடுக்குத் தீபம், தங்கத் தீபம், முத்துத் தீபம். ரிஷப தீபம், புருஷம்ருக தீபம், தட்டு அக்ஷர தீபம், கும்ப தீபம், ஆரத்தி ஆகிய பல தீப வரிசைகளின் பெயர்கள் வருகின்

றன. திருக்கோவில்களில் உள்ள தீபங்கள் அவை

அவற்றைப்பற்றிச் சிவாசார்யர்களிடம் ஐயரவர்கள் கேட்டார்.அவர்கள் அந்தத் தீபங்களைப்பற்றியெல்லாம் விளக்கிச் சொன்னபோது எல்லாவற்றையும் குறித்துக் கொள்ளும்படி ஐயரவர்கள் இவரிடம் சொன்னார்.

சிவாசார்யர்கள் போனவுடன், இவர், இவ்வள” அழகான நூலை இயற்றிய கவிஞர் பெயர் இன்னதென்று தெரியவில்லையே’ என ஐயரவர்களிடம் சொன்னார்.

“இந்நூலை இயற்றிய கவிஞர் பெயர்மட்டுமா தெரியவில்லை! இந்நூலை எனக்கு அளித்த கனவான் பெ யரையுங்கூட அல்லவா என்னால் தெரிந்துகொள்ள