பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181 நாம் அறிந்த கி.வா.ஜ:

முடியாமல் போய்விட்டது!’ என ஐயரவர்கள் கூறினார். பின் அது கிடைத்ததுபற்றி அவர் சொன்னவிவரம் இது:பரம்பரைச் செல்வர்களாக வாழ்ந்து வந்த ஒரு. குடும்பத்தில் பிறந்த ஒருவர், வறிய நிலையை அடைந், தார். அவரது சொத் தெல்லாம் போயிற்று எல்லா வற்றையும் இழந்த நிலையில் அவரிடம் சில பழஞ்சுவடி கள் மாத்திரம் மிஞ்சி இருந்தன. அவற்றை என்ன செய்ய. லாம் என்று யோசித்தார். தாம் வளர்த்து வந்த குழந்தைகளைத் தக்கபடி பாதுகாக்கும் இயல்புள்ள ஒருவரிடம் ஒப்படைக்க எண்ணுபவரைப்போல் எண்ணிப் பார்த்தார்: அப்போது ஐயரவர்களது நினைப்பு அவருக்கு வந்தது. அந்தக் கனவான் தம்மிடம் இருந்த, ஒலைச் சுவடிகளை எல்லாம் ஒரு மூட்டையாகக் கட்டி, கும்பகோணம் எடுத்து வந்தார், கும்பகோணம் அரசுக். கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஒருவரது விடுதிக்குச்: சென்றார். . . . . . ; - ஐயரவர்கள் அப்போது (1900) அந்த மாணவர்: படித்து வந்த கல்லூரியில்தான் தமிழாசிரியராக இருந்தார். - - -

அந்திக் க ன வான் அந்த மாணவரின்மூலம் ‘அயலூரிலிருந்து ஒருவர் சில ஏட்டுச் சுவடிகளுடன் வந்திருப்பதாகக் கூறி, உங்களைப் பார்த்து அவற்றைக் கொடுக்க அவர் விரும்புகிறார் என்று தெரிவி’ என்று. ஐயரவர்களுக்குச் சொல்லி அனுப்பினார்.

ஐயரவர்களுக்கு ஏட்டுச் சுவடி என்றால் போதுமே; கிடைத்தற்கரிய நிதி கிடைக்கப்போகிறதென்று ஆவல் கொண்டவரைப் போல, அன்றே அந்த மாணவரது. விடுதிக்குப் போனார். - o o ஏட்டுச் சுவடிகள் இருந்தண்டு ஆனால் அவற்ற்ைக் கொண்டுவந்த கணவானைக் காணவில்லை . - - ஐயரவர்கள் அந்தச் சுவடிகளையெல்லாம் பார்த் தார். அவற்றுள் பெரும்பாலன அச்சிட்ட நூல்களாகவே