பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 184

அவர் கோடீசுவரக்கோவை’, ’தஞ்சைப் பெருவுடை. யார் உலா’, ‘சரபோஜி குறவஞ்சி போன்ற பல நூல். களை இயற்றியிருக்கிறார்.திருவாசகத்தை முதன்முதலில் அச்சிட்டவர் அவர்தான். திருப்பனந்தாள் தம்பிரானின் பரிசுத்திட்டம்

திருப்பனந்தாள் மடத்து இளவல் சாமிநாதத் தம்பி ரான், இந்தக் கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் பரம்பரையில் வந்தவர். மிக்க தமிழார்வம் உடையவர். ஐயரவர்களிடம் பெருமதிப்புக் கொண்டவர். -

அந்தக் காலத்தில் ஆங்கிலம் படித்தவர்களுக்கு இருந்த மதிப்பு தமிழ் படித்தவர்களுக்கு இருந்ததில்லை. மிக்க ஆர்வத்தோடு தமிழ் படிக்கிறவர்களுக்கு நாம் ஏதாவது ஊக்கம் அளிக்க வேண்டும். அப்போது தான் பலரும் தமிழைப் படிக்க விரும்பி வருவார்கள்’ என் ஐயரவர்கள் சொன்னதைக் கேட்டுத் தாம் இதற்கு ஏதாவது செய்ய வேண்டுமெனப் பனசை இளவல் நினைத்தார். - - - ஆண்டுதோறும் தனித்தமிழ் வித்துவான் பட்டத் துக்குரிய முடிவுத்தேர்வில் முதல் வகுப்பில் முதல்வராகத் தேறுகிறவருக்கு ஆயிரம் ரூபாய் பரிசாக அளித்தற் பொருட்டு அறக்கட்டளை ஒன்றை அறிவித்தார். இதற். காக 1928-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கக் கண்டத்தின் டாரன்டோ என்னும் நகரத்திலுள்ள தி: மானுஃபாக்சரர்ஸ் லைஃப் இன்ஷஅரன்ஸ் கம்பெனியில் (The Manufactures’ Life Insurance Company) (5umur. நாற்பதாயிரத்துக்குத் தம் ஆயுளை இன்ஷ்யூர் செய்து கொண்டார்.இந்த மூலதனம் நிறைவடையப் பத்தாண்டு ஆகலாம். அதன்பின்னர் அந்தத் தொகையைச் சென்னை பல்கலைக்கழகத்தினரிட்ம் செலுத் தி அவர்களைக் கொண்டே அவ்வாண்டு முதல் பரிசு அளித்துவர நினைத் தார். - -