பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.85 - நாம் அறிந்த கி.வா.ஜ.

“அது வரை, பத்தாண்டுக் காலம், இந்த ஆண்டு முதலே சென்னைப் பல்கலைக் கழகத் தேர்வில் முதல் வகுப்பில், முதலாவதாக வரும் மாணவருக்குப் பரிசுத் தொகை ஆயிரத்தை, மடத்தின் வேறு வருமானத்திலிருந்து அளித்து வரலாமே” என ஐயரவர்கள் யோசனை சொன்னார்; அதைத் தம்பிரான் அவர்களும் ஏற்றுக் கொண்டார். -

X x . X.

தமிழ் வளர்ச்சியில் அவ்வளவு ஆர்வமுடைய பனசைப் பின்னவரை ஐயரவர்கள் காணச் சென்றபோது இவரும் உடன் சென்றார். .

ஆசானிடமிருந்து தமிழ் படித்துவரும் இளைஞராகிய இவரைக் கண்டவுடன், இளைஞராகிய அந்தத் தம்பிரான் அவர்களுக்கும் உற்சாகம் உண்டாயிற்று. வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள், சிவக்கொழுந்து தேசிகரின் பாடல்களைப்பற்றியும் பேச்சு எடுத்தார். - . ஐயரவர்கள் அவற்றின் நயங்களை எடுத்துச் சொன்ன போது இரண்டு பேரும் கேட்டு ரசித்தார்கள். கோடீசுவரக் கோவையைத் தங்களிடம் ஒருமுறைமுழுதும் கேட்க வேண்டுமென்ற விருப்பம் எனக்கு இருக்கிறது. எனக்கோ நிர்வாகத் தொல்லை அதிகம். தங்களுக்கோ தமிழ்த் தொண்டு மிகுதி. இந்த நிலையில் நான் தங்களிடம் எப்படி என் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வதென்று யோசித்தேன்’ என்றார் தம்பிரான் அவர்கள்.

யோசிப்பானேன்? இதுவும் ஒரு தமிழ்த் தொண்டு தானே? நான் புதியதாக ஒன்றும் சொல்லப் போவதில்லை. முன்னமே அவ்விடத்தில் எல்லாவற்றையும் ஆராய்ந்து வைத்திருக்கக் கூடும். பரம்பரைச் சொத்தல்லவா? : என்று ஸ்ரீமத் ஐயர் சொன்னார். . என்னதான் படித்திருந்தாலும் தங்களிடம் கேட்பது போல் ஆகுமா? கோடீசுவரக் கோவிையை ஜகந்நாதன் தா-12 *