பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 18&

சோமசுந்தர பாரதியாரின் சொல்வன்மை நன்றா பிருந்தது. தம் கருத்துக்குரிய சான்றுகளை இசைவுபடக் கூறித் தெளிவுறுத்துதலும், பிறவும் அவர் ஒரு வழக்காளர் என்பதை நன்கு தெரிவிக்கின்றன. பெண் இல்லிறைமை புடையாள் என்றும் பெண்ணின் காதல் புனிதம் உடையது’ என்றும், பெண்கள்பால் குறைகள் உள, என்று பண்டை இலக்கியங்கள் கூறா’ எனவும் கூறியுள்ளார்: என்று அப்பேராசிரியர் சொன்ன கருத்துக்கள் பலவற்றை. யும் தொகுத்துத் தம் நாட் குறிப்பில் இவர் குறித்து, வைத்துக்கொண்டார்.

இப்படித் தேனினும் இனிய அமுதக் கருத்துக்களைத் தமிழில் தம் நாட்குறிப்பில் எழுதியபோது, ஆத்திரம், கோபம், துன்பம் தலை தூக்கும்போது தம் நாட்குறிப்பை ஆங்கிலத்திலும் வரைவார்.

மனத்தை வருத்திய ஒரு கிகழ்ச்சி

இவர் பள்ளி இறுதிவரை படித்தது ஆங்கிலம்: பூஜ்யர் த்ரோவர் துரையின் பழக்கத்தால் அந்த மொழியறிவை மேலும் விருத்தி செய்துகொண்டார். ஆங்கிலத்தை அடி யோடு மறந்துவிடுதல் கூடாது என இப்படி ஆங்கிலமும் தமிழுமாக இவரது நாட்குறிப்பு உள்ளதுபோலும்!

தந்தையாரிடமிருந்து ஒரு நாள் இவருக்குக் கடிதம் வந்தது. சிறுவயதில் இவர் கந்தர்வக்கோட்டையில் தம் சிறிய தாயாரின் வீட்டில் தங்கிப் படித்தார். இவருடைய சிறிய தாயாருக்கு இரண்டு குழந்தைகள். ஒர் ஆண், ஒரு பெண். இரண்டு பேரையும் சரியாகப் படிக்க வைக்க வில்லை. அந்தப் பெண் வாலாம்பாளை ஒருவருக்குத் திருமணம் செய்துகொடுத்துவிட்டு அவர்களும் காலமாகி விட்டார்கள். சிறிய தாயாரின் பெண் வாலாம்பாள் இறந்துபோன செய்தியை இவருடைய தகப்பனார் குறிப் பிட்டிருந்தார். அ. ச் செய் தி இவரை நிலைகுலைய வைத்தது. தம் நாட்குறிப்பில் எழுதினார்: