பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 190

தமிழ் மொழியியினிடத்து அளவற்ற பற்றுக் கொண்டிருந்த அவரிடம் பிற மொழிகளிடத்து, குறிப்பாக ஆங்கிலத்திடம் வெறுப்பு இருந்ததில்லை. . . .” ஆங்கிலத்தை நேரான, எளிய இனிய நடையில் அவரால் எழுத முடிந்திருக்கிறது.

அவள் ஆஸ்த்மா நோயினால் உண்மையாக இறந்: திருக்கக்கூடும் என்பதை நான் நம்பவில்லை எனக் க்றுமிடத்து, சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் சிறுமை கண்டு பொங்கித் துடிக்கும் உள்ளத்தை இனம், கண்டுகொள்ள முடிகிறது. -

அவளது பிரிவுக்காக யாரும் வருந்தப் போவதில்லை” என ஏங்குமிடத்து, வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம். வாடினேன்’ என்ற வள்ளலாரின் உள்ளமென அந்தப் பேதைக்காக வாடித் துயருற்றதை உணர முடிகிறது. • * தாயற்ற அந்தக் குழந்தைக்காக வேண்டிக்கொள்ளும், போது, இவரது மென்மையான பரந்த கருணை இதயம் கலப்படுகிறது. - z. - r :

இந்த ஒரு சிறு விஷயத்தைப் படிப்படியாக உரைநடை யில் சொல்லி வந்து, இறுதியில் மூன்றடிக் கவிதை வடிவில், முத்தாய்ப்பு வைத்தாற்போல முடித்திருப்பது அப்போதே. இவரிடமிருந்த கட்டுரை எழுதும் ஆற்றலை வெளிப்படுத்து, கிறது.

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல, :விட்டுச் சென்றாள் குழந்தையை, அழுவதற்கு: பாலுக்காகதாய்க்காக அல்ல” என்னும் கவிதையின் ஒரடி ஒர் ஆத்மஞானியின் வாக்காகவே மிளிர்கிறது.

நாமெல்லாம் அன்றாடம் சோற்றுக்குத்தானே அழுகிறோம்? உண்மையில் நம்மைப் பெற்ற தாய் யார் என்பதை உணர்ந்தோமா? அவளது அருளுக்காக ஏங்கி அழுகிறோமா? அவளது பெருங்கருணையை நினைந்தால் மணிவ்ாசகப் பெருமானைப் போல், உள்ளந்தாள் நின்று. உச்சி அளவும் நெஞ்சம் உருகாதால், உடம்பு எல்லாம்.