பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19.1 நாம் அறிந்த கி.வா.ஜ.

கண்ணாய் .ெ வ ள் ள ந் தா ன் பாயாதால்’ எனக் கேட்போருடைய கண்கள் நீர் சொரியப் பிற்காலத்தில் இவர் ஆ ற் றி ய .ெ பா ழி வுக ளி ன் கரு அதிலே புதைந்துள்ளதைக் காணலாம்.

X X. Χ.

சிறு வயதுமுதலே இவர் எந்த வேறுபாடும் அறியா தவர். காந்தமலை முருகன்பால் கொண்ட காதல் பொங்கிப் பெருகி, அவனுடைய அடியார் அனைவரையும் தழுவிச் செல்லும் நிலைக்கு உயர்ந்துவிட்டவர்.

தமக்கு உபகாரம் செய்தவர்கள் பலரையும் மறவாமல் நன்றியோடு பலபடியாகப் பாரட்டுவது இவரது இயல் பாகவே இருந்தது. ஐயரவர்களின் மாணவராகவும் போய்ச் சேர்ந்துவிட்டார். அந்த ஆசானது குணமும் இதுவே தானே! - -

x . . ; - Χ - - X: முன் ஒரு சமயம் ஏடுகள் தேடி ஊர்ஊராகப் போன ஐயரவர்கள் ஒரு முறை ஊற்றுமலைக்குச் சென்றிருந்தார். அவ்வூர் ஜமீன்தார் இருதயாலய மருதப்பத் தேவர் தமிழ்ப் பற்று மிகவும் உடையவர். , ‘. ஐயரவர்களிடம் அந்த ஜமீன்தார் பேரன்பு கொண் ட வர். சில நா ட் கள் தம் மு.டனே தங்க வைத்துக்கொள்வார். நல்ல ரசிகர் கிடைத்து விட்டால் உண்டாகும் உற்சாகத்துக்கு அளவேது? பழைய நூல்களைப்பற்றியும், பிற்காலத்து நூல்களைப்பற்றியும். ஊக்கத்தோடு பேசிவருவார்; அப்போது நடந்த நிகழ்ச்சி ஒன்று இது. -. -

ஐயரவர்களுக்கு லீவு இல்லை. ஏடுதேடப் பிற இடங் களுக்குப் போகும் சொந்த வேலையும் இருந்தது. ஒரு நாள் அங்கிருந்து புறப்பட விடை தரவேண்டுமென்று. ஜமீன்தாரிடம் கேட்டார். செல்வதற்கு மாலையில் விடை பெற்றுக்கொண்டார். மறு நாள் விடியற்காலையில்