பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 192

இருட்டோடு புறப்படவேண்டும்: தம் ஜாகைக்குச் சென்றார். -

ஆசானிடம் ஊற்றுமலைத் தேவரின் பரிவு

அன்றிரவு பத்து மணிக்கு ஒருவர் வந்து அவரை எழுப்பி, ஜமீன்தார், பால் கொடுத்து வரச் சொன்னார்’ என்பதாக வழக்கம்போல் சூடாகக் குங்குமப்பூ போட்டுக்

காய்ச்சிய பால் தந்து போனார்.

அதைப் பருகும்போது இருதயாலய மருதப்பத் தேவரின் அன்பை ஐயரவர்கள் நினைந்து மனம் நெகிழ்ந் தார். திரும்பவும் காலையில் ஜமீன்தாரைப் பார்த்து அவரது அன்பைப் பாராட்டிப் போகவேண்டுமென்று அவரது உள்ளம் விழைந்தது. -

திட்டமிட்டபடி மறு நாள் விடியற்காலையில் ஐயரவர் கள் கிளம்பவில்லை. காலையில் ஜமீன் தாரைப் பார்க்கும் நேரம்வரை காத்திருந்து அவரைப் பார்த்தார்.

“இரவு பால் அருந்தும்போது தங்களது தாயன்பு என்னை உருக வைத்தது. திரும்பவும் தங்களைப் பார்த்துப் பாராட்டி, என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு விடை பெற எண்ணினதால் விடியற்காலையிலே பகணத்தை மேற்கொள்ளவில்லை. இப்போது விடை பெறுகிறேன்’ எனத் தம் இருதயத்தை இருதயாலய மருதப்பத் தேவரிடம் வைத்துவிட்டுச் சென்றாராம்.

X X

இந்தச் செய்தியை ஐயரவர்கள் சொன்னபோது, *இதுவன்றோ மனிதப் பண்பு இந்தப் பண்பு இல்லாமல் சிறந்த அறிஞராக இருந்துதான் என்ன பயன்?’ என இவரது உள்ளம் விம்மிதமுற்றது.