பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 நாம் அறிந்த கி.வா.ஜ.

‘சீவகசிந்தாமணி முதற் பதிப்பு: ஆசான் அநுபவம்

  • உங்களுக்கு நான் சீவக சிந்தாமணிப் புத்தகம் தருகிறேன். நீர் அதைப் படித்து எனக்குப் பாடம் சொல்வீரா?’ எனச் சேலம் ராமசாமி முதலியார் சொன்னபோது, உம் எனத் தன்னம்பிக்கையோடு. ஐயரவர்கள் சொல்லிவிட்டராம். முதலியாரும் சீவகசிந்தா மணி ஏட்டுச் சுவடியை ஐயரவர்களிடம் கொடுத்தார்.

அந்த ஏட்டுச் சுவடியை வாங்கிக்கொண்டு, வீட்டுக்கு வந்து பிரித்துப் பார்த்தார் ஐயரவர்கள். ஒன்றும் புரிய வில்லை. இவற்றை எப்படிப் படித்துப் பாடம் சொல்லப் போகிறோம்?’ என ஒரு கணம் திகைத்துப் போனாராம். “இத்துணைப் பாடல்களையும் நம்மைப் போன்ற ஒரு மனிதர் தாமே எழுதினார்? அவர் எழுதி வைத்துள்ளதை நம்மால் ஒரு முறை படித்துப் பார்க்கக்கூடவா முடியாது?” என இறைவனின் அருளால் அவருக்கு ஒரு நினைப்பு வந்ததாம்...அவருடைய திகைப்பு எங்கோ போய்விட்டது! அதனை அச்சிட அவர் சென்னை வந்தபோது ஒரு நாள் புரசைப்பாக்கம் அஷ்டாவதானம் சபாபதி முதலி யாரைப் பார்த்தாராம். அவர் சிறந்த தமிழறிஞர்.

  • சீவகசிந்தாமணி"யை உரை யு டன் பதிப்பிக்க ஐயரவர்கள் சென்னை வந்திருப்பது அறிந்து, “அதை நீங்கள் பதிப்பிக்கிறதாவது! பலரும் முயன்று கைவிட்ட காரியம் ஆயிற்றே! யார் தொட்டாலும் நிறைவேறாத இந்த நூலை, சிறுபிள்ளையாகிய நீங்கள் பதிப்பிக்கத் துணிந்தீர்களே என அஞ்சுகிறேன்’ என்று இவர்பால் உள்ள அன்பால் சொன்னார்களாம். -

ஆயினும் பின்னால் சிந்தாமணி’ யை ஐயரவர்கள் பதிப்பித்து வெளியிட்டவுடன், பலரோடு அஷ்டாவதானம் சபாபதி முதலியாரும் ஐயரைப் பாராட்டினார். :

இப்படிப் பலருடைய பாராட்டுகளைப் பெற்ற போதெல்லாம், சீவகசிந்தாமணி நூலை எழுதிய திருத்