பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் . 194.

தக்க தேவரின் கற்பனா சக்தி, உழைப்பு எங்கே, நாடு எங்கே? நாம் சொந்தமாக எதுவும் எழுதவில்லையே! அவர் எழுதியவற்றைத்தானே பதிப்பித்தோம்! எண், ஐயரவர்கள் நினைத்தாராம். இதனாலேதான் கல்வி, செருக்கு என்பது அவரிடம் ஒட்டவே இல்லை மாறாக தாணம், அடக்கம், அன்பே உருவமாக அந்த அண்ணல் தமிழகத்தில் நடமாட முடிந்தது.

இப்படிக் கி.வா.ஜ.வுக்குத் தமிழ் அறிவை ஊட்டிய தோடு, தம் அதுபவ வாயிலாக இவருக்குமனிதப் பண் பாடும் உணர்த்தி, இவரது அறிவும் உணர்ச்சியும் சீராக, சமமாக ஒருங்கிணைந்து பண்படச் செய்தார் இவருடைய ஆசிரியப்பிரான். - -

ஆசான் திருவடியா? அரசுப் பணியா?

தம்மிடமுள்ள சுவடிகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பதற். காக ஐயரவர்கள், அரசுக் கையெழுத்து நூலகத்திலிருந்து சில சுவடிகளை வாங்கி வந்திருந்தார். அந்த வேலை முடிவுறாமல் இருந்தது. எனவே, அந்தச் சுவடிகளை மேலும் ஒரு மாதம் தம்மிடம் வைத்துக்கொள்ள நூலகருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதை நேரில் கொண்டு போய் க் கொடுத்து வரும்படி’ இவரை அனுப்பினார். , a இவர் அந்தக் கடிதத்தை நூலகரிடம் கொண்டு போய்க் கொடுத்தார். அவருக்கு இவரைத் தெரியும்; இவரைக் கண்டவுடன், அந்த நூலகத்தில் கவனிப்பாளர் பதவி ஒன்று இருப்பதாகக் கூறி, அதில் சேர விருப்பம் உண்டா எனவும் கேட்டார்.

‘ஐயரவர்களை விட்டு வருவதற்கில்லை” என்று இவர் சொன்னார். துர்லகரோ, எதற்கும் அவரைத் கேட்டுக்கொண்டு வா. இந்த வேலைக்குப் போக. வேண்டாம் என்று அவர் சொல்லமாட்டார். இது நல்ல.