பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195 நாம் அறிந்த கி.வா.ஜ. கவலை. உன்னைப் போன்ற ஒருவர் இங்கிருப்பது இந்த காலகத்திற்கே மிகவும் உதவியாக இருக்கும் என்றா it. . :நூலகத்தில் தமிழ்சம்பந்தமான பணிகளைச் செய்ய இவர் மிகவும் தகுதியுடையவர்’ என்பதாக நூல்க க்யூரேட்டருக்கும் ஒரு குறிப்பு எழுதி இவரிடமே கொடுத்து அவரைப் போய் பார்க்கச் சொன்னார். இவர் வீட்டிற்கு வந்தவுடன் ஐயரவ செய்தியைச் சொன்னார். -

அது நல்ல வேலைதான். முதலில் உம் கருத்தைச் சொல்லும்’ என்றார் ஐயரவர்கள்.

தங்களிடம் இருந்து தமிழ் படிப்பது ஒன்றுதான் இப்போது எனது லட்சியம்’ என இவர் சொன்னபோது, ஆசான் மகிழ்ந்து போனார்; : நானும் அப்படித்தான் கருதுகிறேன். அந்த வேலை உமக்கு வேண்டாம்” என்று சொன்னதோடு, ஆத்ம விடுதலைக்காகச் சிலர் சந்நியாசம் வாங்கிக்கொண்டு போகிறார்கள். சிலர் தேச விடுதலைக் காகத் தம்மையே அர்ப்பணித்துக்கொண்டு போராடு கிறார்கள். தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபடுவது ஒன்றைத் தான் நான் எனது லட்சியமாகக் கொண்டிருக்கிறேன். இதனால் நான் விட்டிலே தங்கின நாட்களைவிட ஊர் ஊராக அலைந்து திரிந்த நாட்கள் பலவாகும். சில ஊர் களில் பகல் சாப்பாட்டிற்கு வசதி இருந்ததில்லை. அங்கெல்லாம் போகும்போது, ஒரு நாள் பகல், பசியைப் பொறுக்க முடியாமல் புளியங்கொழுந்தை உருவித் தின்றிருக்கிறேன். எதைக் கேட்டாலும் கொடுப்பார்கள், தண்ணிர் கேட்டால் கொடுக்கக் கொஞ்சம் தயங்கும்படி தண்ணிர்க் கஷ்டம் கிராமங்களில் அதிகம் இருந்தது. சில இடங்களில் படுக்க வசதியின்றி மரத்தடியில் உறங்கியிருக் கிறேன். இப்படிப் பசி, தாகம், தூக்கம், உடல் வருத்தம் பாராமல் ஒடியோடி அலைந்து செய்த வேலை போதாதா? சிவ சிவ என்று வீட்டிலே தங்கி ஜபம் செய்தால் போகிற வழிக்காவது புண் ணியம் உண்டு’ என்று இங்குள்ளவர்களே,

- : :  அதோடு,

ர்களிடம் இந்தச்