பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197 r நாம் அறிந்த கி.வா.ஜ.

கொண்டுள்ள நாம், தேசபக்தி உணர்வோடு தமிழ்ப். பயிற்சியிலே ஊன்றி நிற்பதுதான் சிறந்தது.

“எல்லாச் செயல்களும் உயர்ந்தவைதாம் என்றாலும் எல்லாவற்றையும் நம்மால் மேற்கொள்ள முடியுமா? நாம் கொண்ட லட்சியத்தில் ஊன்றி நின்று நாம் செய்யும் பணி உயர்ந்ததாக இருந்தால் அதுவே சிறப்பை அளிக்கும்; சமுதாயமும் நலம் பெறும் இதுவும் ஒருவகைத் தொண்டு, ஒரு வகைத் துறவு நிலையே என ஐயரவர்களும் கருது. கிறார். . >

ஆகவே, கள்ளுக்கடை மறியலில் நீங்கள் ஈடுபடுவதை. விடுத்து தமிழ் படிப்பதிலேயே ஊக்கம் காட்டுங்கள். எப்படியாவது உங்களையும் சென்னைக்கு வரவழைத்துக் கொண்டு விடுவேன். இங்கே ஸ்ரீமத் ஐயரிடம் தொண்டு. செய்யும் வாய்ப்பு உங்களுக்கும் கிடைக்கும் என எழுதினார் இவர். - -

திருவாசகமா? ராமாயணமா?

சுவாமி என்ன பண்ணுகிறார்? எனக் கேட்டுக் கொண்டே அந்த வீட்டுக்காரராகிய கிழவர் மெள்ள

வெளித் திண்ணைக்கு வந்து உட்கார்ந்துகொண்டார்.

அவரது வீட்டில் மற்றொரு திண்ணையில்தான் திருவிடைமருதூரில் 9 - 4 - 1929 - இல் நடந்த மகாவிங்க சுவாமி தி ரு க் .ே கா வி ல் கும்பாபிஷேகத்திற்காகக் சென்றிருந்த ஐயரவர்கள் உட்கார்ந்திருந்தார். அப்போது இவரும், சந்தானமையங்காரும் ஐயரவர்களுக்கு எதிரில் உட்கார்ந்திருந்தார்கள். ஐயரவர்கள் திருவிடைமருதூர் வருவது தெரிந்து அந்த ஊருக்கு ஐயங்கார் வந்திருந்: தார்; திருவையாறு அரசர் கல்லூரியில் அவர் அப்போது தமிழ்ப் பண்டிதராக இருந்தார். நன்றாகப் பாடுவார். எனவே, ஐயரவர்கள் அ வ ைர த் திருவாசகத்தை, எடுத்துப் படிக்கச் சொன்னாள். இசையுடன் அதைப்