பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில்! 198

படித்தார். ஐ யங் கார்; வீட்டுக்குள் இருந்தவர்கள் திண்ணையில் அவர் வாசித்த இன்னிசையால் கவரப்பட்டு இடைகழிக்கு வந்து இருந்துகொண்டு கேட்டு வந்தனர். இடையிடையே ஐயரவர்களும் சில கருத்துக்களை விளக்கி வந்தார். வெளியூர் போகும்போது இப்படி ஒய்ந்த நேரங்களில் ஏதேனும் ஒரு தமிழ் நூலை வாசிக்கச் சொல்லிக் கேட்பது அவரது வழக்கம். - --

“ராமாயணந்தானே இது? அடடா, என்ன அழகு! என்ன அழகு!’ எனச் சொல்லிக்கொண்டு வீட்டுக்காரக் கிழவரும் மிகவும் சிரத்தையோடு கேட்கலானார்.

இது ராமயணம் இல்லை; திருவாசகம்’ என ஐயரவர்கள் அந்தக் கிழவருக்குப் பதில் சொல்லியிருக் கலாம். அந்தக் கிழவரோ ஐயங்காரின் இசையொலியில் சாட்சாத் ராமபிரானையே காணும்போது அவரது தினைப்பைக் க ைல க் க ஐயரவர்கள் விரும்பவில்லை போலும்! :ராமாயணந்தான். எப்படி இருக்கிறது?” என்று கிழவரைப் பார்த்துக் கேட்டார். -

‘வெகு பேஷாயிருக்கிறது! இப்போது எந்தக் கட்டம் படிக்கப்படுகிறது?’ என்றார் கிழவர். .

  • ராமர் அயோத்தியை வி ட் டு ப் புறப்படப்

போகிறார்’ என்றார் ஐயரவர்கள், கொஞ்சங்கூடச் சிரிக்காமல். -

  • அப்படியா?”

திருவாசகத்தில் மிகவும் உருக்கமான இடம் ஒன்று வந்தது. ஐயரவர்கள் உருகிக் கண்ணிர் விட்டார். ...

சுவாமி இப்போது புறப்பட்டு விட்டார் போல் இருக்கிறது...’ என்று சொல்லிக்கொண்டே கிழவரும் கண்ணிர் விட்டார். - -

சிறிது நேரம் சென்றது. - :இப்போது சுவாமி என்ன பண்ணுகிறார்?” “சீதையைத் தேடிக்கொண்டு புறப்படுகிறார்: