பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199. தாம் அறிந்த கி.வா.ஜ.

கிழவருக்கு இவ்வளவு சீக்கிரம் சீதை எப்படிப் பிரிந்தாள் என்பதை ஆலோசிக்கும் சக்தி இல்லை. இருந் தால், தாம் கேட்பது ராமாயணம் அன்றென்பதை முன்பே அறிந்துகொண்டிருப்பார் அல்லவா? சிறிது நேரம்சென்றது. படிக்கப்படும் திருவாசகத்தில் சில பதிகங்கள் முடிந்தன. சந்தான மையங்கார் படிப்பதை நிறுத்தினார். இப்போது சுவாமி என்ன பண்ணுகிறார்?’ என்று கிழவரிடமிருந்து மீண்டும் கேள்வி பிறந்தது. -

சதுரங்கப் போகிறார்: ‘ என்று ஐயரவர்கள் சொன்னார். துங்கட்டும்’ என்று சொல்லிக்கொண்டே கிழவரும் எழுந்து உள்ளே போனார். - -

ஐயரவர்களின் நகைச்சுவை உணர்ச்சி, இதுவரை உள்ளுக்குள்ளேயே சிரிப்பைச் சிறைப்படுத்தி வைத்திருந்த இவர்களை வெளியே சென்று வயிறு வலிக்கச் இரித்து வைத்தது.

ஐயரவர்கள் திருவிடைமருதூரிலிருந்து திருநெல்வேலி சென்றார். அங்கிருந்து விக்கிரமசிங்கபுரம் போனார். சிவஞான போத'த்திற்குத் திராவிட மகாபாஷ்யம் இயற்றியவர் திருவாவடுதுறை ஸ்ரீ சிவஞான முனிவர், அவரது ஊர் விக்கிசிமாங்கபுரம். அவர் பிறந்த வீடு அங்கே இருக்கிறது. சிவஞான சுவாமிகளின் 145 - ஆம் குருபூஜை உற்சவம் 18 - 4 - 29 - இல் அங்கே நடந்தது. அந்த விழாவுக்குத் தலைமை வகித்தார் ஐயரவர்கள்.

திருவிடைமருதூர்ச் சம்பவம் அவர் நெஞ்சைவிட்டு அகலவேயில்லை. விழா முடிந்து சென்னை திரும்பும் போது ஐயரவர்கள் சொன்னார். ராமாயணம் படிப்ப தாக நான் சொன்னது வேடிக்கையாக, ஏன் தப்பாகக்கூட இருக்கலாம். ஆனால் தாம் கேட்டது ராமாயணம் என்ற அளவில் அந்தக் கிழவருக்கு உண்டான உருக்கத்தைக் கவனித்தீர்களா?...அடடா என்ன உருக்கம்! ; கேட்கும் ஒலியிலெல்லாம் கந்தலாலா-கின்றன்

கீதம் இசைக்குதடா கந்தலாலா!!

‘....'