பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 200

எனப் பாரதியார் பாடவில்லையா? நாமும் நல்லதையே கேட்டுக் கேட்டு நினைவுகொள்ளவும் பழகிவிட்டால் வயது முதிர்ந்த காலத்தில் பிறர் நம்மைத் திட்டுவதையுங்கூட நல்லதாகவே எண்ணி மகிழலாம்போல் உள்ளது. அப்போது நமக்குத்தான் எதுவும் காதில் விழாதே!” இப்படித் தம் ஆசான் சொன்னபோது இவருக்கு மறுபடியும் சிரிப்பு வந்துவிட்டது. ஆயினும் உள்ளம் என்னவோ நெகிழ்ந்து போயிற்று.*

X X X

ஐயரவ்ர்களிடம் படித்த திரு. கோதண்டராமனும், திரு. வி. மு. சு.வும் வித்துவான் தேர்வில் வெற்றி பெற்றார்கள். அவர்களுள் வி.மு.சு. அவர்கள் மாநிலத்தில் முதல் வகுப்பில், மு. த ல் வ. ரா. க த் தேர்வு பெற்றது ஐயரவர்களுக்கும் அவருடைய மைந்தருக்கும் மிக்க பெருமையாக இருந்தது. -

சென்னைக் கிறிஸ்துவப் பெண்கள் கல்லூரித் தமிழ்ப் பண்டிதராகக் கோதண்டராமையரும், (ஆ ண் க ள்) கிறிஸ்துவக் கல்லூரித் தமிழ்ப் பண்டிதராக வி. மு. சு. வும் பணியில் சேர்ந்தார்கள்.

பின்னத்துர் அ. நாராயணசாமி ஐயர், ஐயரவர்களின் தமிழாராய்ச்சிக்குச் சில காலம் துணையாக இருந்திருக் கிறார். “ந ற் றி ைண ைய அ வ ர் பதிப்பித்தார். அவருடைய தம்பி சுப்பிரமணிய ஐயரின் குமாரியைக் கோதண்டராமனுக்குத் திரு ம ண ம் செய்துவைக்க ஐயரவர்கள் ஏற்பாடு செய்தார். தாமே முன்னின்று அதனை நடத்தியும் வைத்தார்.

கோதண்டராமையரின் மாமனார் சுப்பிரமணிய ஐயரும் தமிழ் நூல்களில் நல்ல பயிற்சி உடையவர்.

கி. வா. ஜ, 1-3-35-பாரத ஜோ தி'யி ல் குறிப்பிட்டது. -