பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201 “ . . நாம் அறிந்த கி.வா.ஜ.

கம்பராமாயண'த்திலும். பெரியபுராண"த்திலும் ஆயிரக் கணக்கான பாடல்கள் அவருக்கு மனப்பாடம். அடிக்கடி அவர் ஐயரவர்களைப் பார்க்க வருவதுண்டு. -

ஒரு மு ன ற கோதண்டராமையரின் மா ம ன ராா ஐயரவர்களின் வீட்டிற்கு வந்திருந்தார்; அவர்கள்’ வீட்டிலேயே தங்கி உணவு உண்டார். - பெரியவர் ஒருவர் தந்த ஊக்கம்

அன்று இவருடன் அவர் தனியே பேசிக்கொண்டிருந்த, போது, ஐயரவர்கள் சொன்னார்களே, நீ விரைவி சாகித்தியம் செய்வாயாமே! நான் சமஸ்யை கொடுத்தால் உடனே பாடுவாயா?’ என்று கேட்டார். -

இவர், சொல்லுங்கள், முயன்று பார்க்கிறேன்’ என்றார். - . . . . -

சண்பகம் என்று முடிய வேண்டும். முல்லை என ஆரம்பித்துப் பல பூக்களின் பெயர்களாக வர வேண்டும். எங்கே, பாடு’ என்று சொன்னார்.

இவர் உடனே ஒரு பாடலை எழுதிக் கொடுத்தார்:

முல்லை முறுவல் முளரி திருவதனம் அல்லில் அலரும் அருங்குவளை-கல்லவிழி காடற் கரிய கலத்தான் இவட்குடலம் பாடற் பெருசண் பகம்.” (முறுவல்-சிரிப்பு: முளரி-தாமரை, அ ல் லி ல்இரவில்; நலம்-அழகு) -

இப்படி ஒரு பெண்ணின் அவயவங்களை வருணிப்ப தாக, அப்பாடல் பல பூக்களின் பெயர் வர, முல்லை என எடுத்துச் சண்பகம் என முடிவதாக அமைந்தது.

பாட்டைக் கேட்டவுடன் சுப்பிரமணிய ஐயருக்கு மிக்க மகிழ்ச்சி உண்டாகிவிட்டது. இப்படி எத்தனை பாடல்கள் எழுதி இருக்கிறாய்? என்று கேட்டார். - அப்போதைக்கப்போது பாடுவதுதானே! கணக்குத் தெரியாது’ என்றார் இவர். ரா-13