பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 303

‘அவற்றை எல்லாம் எழுதி வைத்துக்கொள்வது இல்லையா?”

“இல்லை. - சி அட அசடே இவை இன்று இல்லாவிட்டாலும் பிறிதொரு காலம் உனக்கே பயன்படக்கூடும். நான் உனக்கு ஒரு நோட்டுப் புத்தகம் தருகிறேன். அதில் உன் பாடல்களையெல்லாம் எழுதி வைத்துக்கொள்’ என்றார்.

மரவேலை செய்வது, பைண்டு செய்வது முதலிய கைத்தொழில்களிலும் அவர் வல்லவர். எனவே, ரூல்” போட்ட தாள்களை எடுத்து, ஒரு நோட்டாகத் தைத்து, பைண்டு செய்து இவரிடம் கொடுத்தார்.

அதோடு, இந்த நிகழ் ச் சி ைய ஐயரவர்களிடம் சுப்பிரமணிய ஐயரே சொல்வியும்விட்டார். -

மறு நாள் ஐயரவர்கள் இவரிடம் பேசும்போது: :கப்பிரமணிய ஐயர் வைத்த பரீட்சையில் வென்று, என் வார்த்தையைக் காப்பாற்றிவிட்டாய்’ எனச் சொல்லிப் பரவசம் அடைந்தார். -

அந்த நேரம் தம் ஆசானிடம் காணப்பட்ட மன நிறைவை இவரது உள்ளந்தான் அறியும்!

X “ ... }. X

ஒரு நாள் ஐயரவர்களுடைய குமாரர், பிற்பகலிலேயே அலுவலகத்திலிருந்து வந்துவிட்டார். அவருக்கு உடம்பு சரியில்லை. இரண்டு மூன்று நாட்கள் சேர்ந்தாற்போல் காய்ச்சல், - - பிறகு அவருக்கு உடம்பு சற்றே குணமான கையோடு அவருடைய குமாரரான சுப்பிரமணியம் டைஃபாய்டு ஜ"ரத்தில் படுத்துவிட்டார். - - வீட்டில் உள்ளவர்கள் மிகவும் கவலை அடைந்தார்கள். ஐயரவர்களும் கவலைப்பட்டார், படிக்காத நாள் எல்லாம் பிறவாத நாளிே என்பதுதான் இந்தத் தமிழ்த் தொண்டனின் கவலை. . . -