பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

207 நாம் அறிந்த கி.வா.ஜ.

எழுதுவார். எந்தப் புத்தகத்தை எப்போது படித்தாலும் பென்ஸிலும் குறிப்புப் புத்தகமும் இல்லாமல் படிப்பது அவரது வழக்கமன்று. பாடம் செய்ய வேண்டிய சிறப் பான பாட்டு என்றால், அதன்முன் சுழி இருக்கும். ஐயத்துக்கு உரிய இடங்கள் என்றால் ஒரு சிறு கோடு இருக்கும். நயமுள்ள இடங்களில் புள்ளிகள் வைக்கப் பட்டிருக்கும்.

x х X

ஆசானைப் போலவே இவரும் தாம் படிக்கும் நூல் களில் இந்தக் குறியீடுகளை வைக்கத் தொடங்கினார்.

தக்கயாகப்பரணி” பதிப்பின்போது கேர்ந்த அநுபவம் :

என்றைக்குமே, தக்கயாகப் பரணி” என்ற நூலிடத்து இவருக்கு ஒரு தனி அபிமானம் உண்டு. காரணம், அப்போது ஐயரவர்கள் அந்தப் பரணி நூல் சம்பந்தமான கையெழுத்துப் பிரதியை அச்சிட அச்சகத்திற்கு அனுப்பி யிருந்தார். முதல் ஃபாரம் ப்ரூஃப்” வந்தது. அதனை அவர் பார்ப்பதற்கு முன் இவரிடம் கொடுத்துப் பார்க்கச் சொன்னார். இவர் ஃப்ரூப் பார்த்துத் தவறுகளைத் திருத்திவிட்டுச் சிற்சில இடங்களில் தம் ஆசானைப் போன்றே சில குறியீடுகள் வைத்திருந்தார்.

  • ப்ரூஃப்” பார்ப்பதென்றால் எவ்வளவு சிரமமான காரியம் என்பதை எல்லோரும் அறியமாட்டார்கள். முதல் காலி'யிலிருந்து கடைசியில் அச்சிடும்படி உத்தரவு .ெ கா டு க் கும் வரையில் ஒவ்வொரு முறையும் கூர்ந்து கவனிப்பது பூரீமத் ஐயரது வழக்கம். எ வ் வ ள வு பே ர் பார்த்தாலும் இறுதியில் ஒரு முறை அவர் பார்க்க வேண்டும். அவரது கண்ணுக்குத்தான் முடிபுப் பிழை, விளங் காத குறிப்பு இவை தெரியும். .