பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209 நாம் அறிந்த கி.வா.ஜ. போல் தம் விருப்பப்படி எந்தக் காரியத்தையும் தொடர்ந்து தனியாகச் செய்ய முடியவில்லை. - -

இவருடைய பேராற்றலும், எழுத்து வன்மையும்: தமிழன்பும் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. இவரது உதவிகொண்டு குறுந்தொகை'யைப் பதிப்பித்து விட வேண்டுமென்ற மனவெழுச்சி அவருக்கு உண்டாயிற்று.

குறுந்தொகை அகத்திணையைச் சார்ந்த நூல். கருவிநூலாக ஒரு கோவையைப் பாடம் கேட்டால் ‘குறுந்தொகை”ப் பா ட ல் நன்றாக விளங்குமென ஐயரவர்கள் இவருக்குத் தஞ்சைவாணன் கோவை யைப் பாடம் சொன்னார், பின்னர்த் தம்மிடம் இருந்த குறுந்தொகை க் காகிதப் பிரதியை இவரிடம் கொடுத்துப் பாடம் சொல்லத் தொடங்கினார்.

ஒரு நாள் பிற்பகலில் இவர்கள் ஆனந்த குத்திரேசர் வண்டு விடுதூது” என்ற நூலை ஆராய்ந்து, குறிப்புரை எழுதத் தொடங்கினார்கள்.

அதனை இயற்றியவர் கச்சியப்ப முனிவர் ஆவர். அவர் திருவாவடுதுறை ஆதீன மகாவித்துவானாக விளங்கியவர்: சங்க நூல்களையும் அவற்றின் பிரயோகங் களையும் நன்கு அறிந்தவர். பல பிரபந்தங்களையும் இயற்றியிருக்கிறார். தமிழ்ப்பண்டிதராகப் பள்ளியில் பெற்ற அநுபவம் :

அந்தச் ச. ம ய ம் ஐ ய ர வ ர் க ைள ப் பார்க்கத் தி ரு வ ல் லி க் கே விை இந்து உயர்நிலைப்பள்ளியின் கரஸ்பாண்டென்ட், வந்தார். தமது பள்ளித் தமிழ்ப் பண்டிதர் லீவு” போட்டிருப்பதால், தாற்காலிகமாக ஒரு தமிழ்ப் பண்டிதரை அனுப்பி வைக்க வேண்டுமென்று ஐயரவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

உடனே ஐயரவர்கள் இவரைக் காட்டி, “நான் இந்தப் பையனை அனுப்பி வைக்கிறேன். நன்றாகப் பாடம்