பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2、 நாம் அறிந்த கி.வா.ஜ.

அரட்டை அவர்களுக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி எதற்கும் பயன்படாத வீண்பேச்சாகப் போய்விடும். பிறருடைய மனம் அறிந்து பேச வேண்டுமானால் அது. லேசான காரியம் அன்று. ஏங்கிப் போனவர்களுக்கு, ஆறுதல் உண்டாகும்படி உற்சாகம் ஊட்டுவது ஒரு வகை. துக்கம் உள்ளவர்களிடம் அவர்களுக்கு ஆறுதல் உண்டாகும். படி பேசுவது வேறு வகை. கோபம் உள்ளவர்களிடம் அவர்களது கோபத்தைத் தணிப்பதற்கு ஒரு விதமாகப் பேசவேண்டும். பெண்களிடத்தும், குழந்தைகளிடத்தும் இயல்பாகக் காணப்படும் திறமையறிந்து அவர்களது திறமை வளர்ச்சியுறும்படி பரிவோடு பாராட்டிப் பேசுவது. ஒரு வகை.

இவை யாவற்றிலும் இவர் வல்லவரானதற்குக் காரணம் ஐயரவர்களே. +

3. х X:

ஆசானிடம் கற்ற பண்பு : . . . .

ஐயரவர்கள் தனி அறிவாற்றலும், நல்ல உலக அநுபவமும் நிரம்பப் பெற்றவராக விளங்கினார். குழந்தை முதல் கிழவர் வரை யாவரும் இன்புறும்படி உரையாட அவருக்குத் தெரியும்.

ஒரு மன்னரிடம் சுவாரஸ்யமாகப் பேசவும் அவர் அறிவார். அதே கையோடு மன்னரது வேலைக் காரனிடமும் அன்பாகப் பேசி அவனை மகிழ்விக்க அவரால் முடியும். z: , -

ராமநாதபுரம் ரீராஜராஜேசுவர சேதுபதி மன்னர் ஐயரவர்களிடம் மிக்க மதிப்புடையவர். சென்னை மாநிலத்தில் புதிய மந்திரிசபை அமைய இருந்தபோது மன்னர் சென்னைக்கு வந் தி ரு ந் தார். அப்போது சேதுபதிக்கும் மந்திரி பதவி கிடைக்கும்’ எனப் பலரும் பேசி வந்தார்கள். . . . . . . . .