பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - 214

இவரை அழைத்துக்கொண்டு, ஐயரவர்கள் அவர் தங்கியிருந்த இடத்திற்கு அவரைப் பார்க்கச் சென்றார்.

அங்கிருந்தவர்கள் வருத்தத்தோடு கூடிக் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களை ஐயரவர்கள் விசாரித்த போது சேதுபதிக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை யென்று தெரிந்தது. இதனால் மன்னருக்கு ஏமாற்றமும், சிறிது மன வருத்தமும் இருக்குமென்று ஐயரவர்கள் உணர்ந்தார்.

மன்னரோடு பேசும்போது, மகாராஜாவுக்கு மந்திரி பதவி கொடுக்க இருந்த ஏற்பாடு கடைசி நிமிஷத்தில் மாறி விட்டதை அறிந்தேன். இதில் தாங்கள் வருத்தப்பட வேண்டியது ஒன்றும் இல்லை. மகாராஜா மகாராஜா வாகவே இருக்க வேண்டுமேயன்றி மந்திரியாவதாவது? மகாராஜா பதவிக்கு மந்திரி பதவி ஈடாகுமா?’ எனச் சொன்னபோது ராமநாதபுரம் மன்னரது மனவாட்டம் பறந்தோடிவிட்டது!

இப்படிப் பிறரது உள்ளம் அறிந்து உவக்கும்படி ஐயரவர்கள் பேசுவார். அந்த அந்தச் சந்தர்ப்பங்களுக்குப் பொருத்தமான சிலேடைகளும் அவரது பேச்சில் வந்து அமையும்.

முன்னர் ஒரு முறை இதே சேதுபதி மன்னரைப் பார்க்க வுட்லண்ட்ஸ் ஒட்டலுக்கு ஐயரவர்கள் இவரை அழைத்துக்

கொண்டு சென்றார்.

ஐயரவர்களைக் கண்டவுடன் சேதுபதி மன்னர் மகிழ்ந்து அவரைத் தம் அருகில் சோஃபாவில் உட்கார வைத்துக்கொண்டார்.

அப்போது ஐயரவர்கள், ம க |ா ரா ஜா எதை யெதையோ கொடுத்துப் பலரை ஆதரிப்பதைக் கண்டிருக் கிறேன். இப்போது எனக்குச் சமஸ்தானத்தையே (சமமான இடத்தையே) தந்துவிட்டீர்கள்’ எனச் சொன்னபோது ஐயரவர்களது சிலேடை நயம் அனைவரையும் மகிழ் வித்ததாம்.

-X X