பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215 - நாம் அறிந்த கி.வா.ஜ.

தம்பிரானின் தமிழன்பு : ... .” .

பின்பு ஒரு நாள் ஸ்ரீலஸ்ரீ சொக்கலிங்கத் தம்பிரான்இவருடன் உரையாடும்போது, சென்னையில் நீங்கள் எங்கே தங்கி இருக்கிறீர்கள்?’ என்று கேட்டார்.

இவர், தாம் தங்கியிருக்கும் இடத்தையும், வாடகை யையும் சொன்னார். -

உடனே அவர் இவரிடம் 120 ரூபாயைக் கொடுத்து, மோசம் பத்தாகச் செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள்'” என்றார். -

இவர் அதை மிக்க மரியாதையோடு வாங்கித் தம் கண்களில் ஒற்றிக்கொண்டு, இது எனக்கு மா சம்பத்து (பெரிய சம்பத்து) அ ல் ல வ ா?” என நயம்படச் சொன்னதைக் கேட்டு அனைவருமே .ெ ந கி ழ் ந் து போனார்கள். -

“தமிழ்ப் புலமை உடையவர்களால்தான் இப்படிச் சிலேடையாகப் பேச முடியும், ஐயரவர்களிடமிருந்து அப்படிப் பேசவும் கற்றுக்கொண்டு விட்டீர்களே! தொடர்ந்து அவருக்கு உதவியாக இருந்து வாரும்’ என ஸ்ரீலஸ்ரீ சொக்கலிங்கத் தம்பிரான் இவரை வாழ்த்தினார். * அது காந்தகிரி முருகனைப் பரவும் நாவாச்சே! சொல்வியும் தர வேண்டுமா?’ என ஐயரவர்கள் மெல்லச் சொல்லும்போது அவருடைய கண்களில் ஆனந்தம் நடன மாடிற்று. . பரிசு பெற்ற அன்பரின் பாராட்டுவிழாவின்போது...

கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலில் வித்துவான் வி.மு. சு. அவர்களுக்குப் பரிசளிப்பு விழா 15-9-1929-இல் நடைபெற்றது. ஐயரவர்களின் பெயரிலேயே அழைப்பிதழ். அச்சிடப்பெற்று அறிஞர்கள் பலருக்கும் அனுப்பப்பட்டது. :சென்னைப் பல்கலைக்கழக வித்துவான தேர்வில் முதலாவதாகத் தேறுபவர்களுக்குத் திருப்பனந்தான் அதிபர் ஆயிரம் ரூபாய் பரிசளிக்கும் திட்டம் முதல் முறை யாகத் தொடங்கப்படுவதால் அந்தச் செயலைப் பாராட்டி