பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 216.

ஐயரவர்கள் இவரையும் அக்கட்டத்தில், திருப்பனந்தாள் மடாதிபதியின் அறச்செயலைப் பாராட்டிச் சில பாடல். களைப் பாடச் சொல்லியிருந்தார்.

தருமிக்குப் பொழில்சிறக்கும் திருப்பனசைச்

சொக்கலிங்கத் தவரா சன்சீர்த் தருமிக்கு மதுரேசர் பொற்கிழிதக்(து)

அளித்ததுபோற் றமிழ்வல் லோர்க்குத் தருமிக்கு வலயத்தில் ஆயிரம்பொன் எனக்கேட்டார் தரணி யின்மாக் தருமிக்கு மொழிப்புலவோர் தாமுமிகக்

களித்தனர்தண் டமிழ்ச்சீர் ஓர்ந்தே !” என இவரும் இப்படி விருத்தம், சந்தம், வெண்பா ஆகிய வற்றில் நான்கு பாடல்களை அக்கூட்டத்தில் பாடி பாவரையும் மகிழ்வித்தார்.

X - X - ,X

இவர் மோகனூரிலிருந்து சென்னைக்கு வந்து ஒர் ஆண்டு ஆகிவிட்டது. இந்த ஓராண்டுக் காலமும் ஐயரவர் களுடனேயே இருந்து வந்தார். அவரிடம் பல தமிழ். நூல்களைப் படித்து, அவரது ஆராய்ச்சிப் பணிகளிலும் ஈடுபட்டார்.

இவருடைய குடும்பத்தினர் அனைவரும் மோகனூரில் இருந்தார்கள். அப்போது இவருடைய முதல் சகோதரி தலைச்சன் பிரசவத்திற்காகப் பங்களூரிலிருந்து மோகனூர் வந்திருந்தாள். ஒரு நடை வந்துபோகும்படி தாயார் கடிதம் எழுதினார். -

  • அடி 1. தருமிக்கு - மரங்கள் மிகுந்து: அடி 2. - தருமி என்பவனுக்கு; அடி 3. தரும் இக்குவல யத்தில் - தருகின்ற இந்த உலகில்; அடி 4. தரணி யின் மாத்தரும் இக்கு (சுரும்பு) மொழிப் புலவோர் தாமும், -