பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவர் ஐயரவர்களிடம், மோகனூர் சென்று பெற்றோர் களைப் பார்த்துவிட்டு விரைவில் வந்துவிடுவதாகச் சொல்லி விடைபெற்றுக்கொண்டு 11-10-29 - இல் தம் ஊருக்குச் சென்றார்: 29-11-29 -இலேதான் இவரால் சென்னைக்குத் திரும்பி வர முடிந்தது. - , - z *  : இந்த இடையிட்ட (1.1.10.29-29-11-29) காலத்தில் மோகனூரிலிருந்து துத்திகுளம், புதுப்பாளையம், மணப் பள்ளி, வாங்கல், கிருஷ்ணராயபுரம் மு. த லி ய பல ஊர்களுக்குச் சென்றிருந்தார். அங்கங்கே சில இடங்களில் பேசினார். சேந்தமங்கலம் சென்று தம் உடையார் நண்பர் களுடன் அளவளாவி வந்தார். காசி சுவாமிகளையும், அவதூத மகாமுனிவரையும் தரிசனம் செய்துகொண்ட்ார். (சேலம் மாவட்ட) வேலூர் சென்று பண்டிதர் கணபதி ஐயரோடு அளவளாவினார். - -

முதல் சகோதரி மதுகரம்மாள் 11-11-29 அன்று ஒர் ஆண் குழந்தையைக் கருவுயிர்த்தாள். ராமசுப்பிரமணியன்: என்பது குழந்தையின் பெயர். . . .. - மோகையில், காந்தமலை முருகன் புத்தகசாலை”

என ஒன்று நிறுவப்பெற்றது. ‘. . . . . . . . . . . . . தீபாவளி அன்று விடியற்காலை காந்தமலை அடி. வாரத்தில் சுவாமி அபயானந்தரும், சுப்பு செட்டியாரும், இவரும் அமைந்த ஒரு குழுவினரின் படம் எடுக்கப்பட்டது. இவர் ஐயரவர்களைப் பிரிந்திருந்த இந்த ஒன்றரை மாத காலத்தில் இவர்கள் ஒருவருக்கொருவர் சில கடிதங்களை எழுதிக்கொண்டார்கள். அவை அனைத்தும், கிடைக்கவில்லை. என்றாலும், கிடைத்தவை இவர்களது வாழ்வியலின் இன்ப துன்பங்களை நாமும் அறிந்து கொள்ளத் தக்கனவாக உள்ளன. >

  • கி.வா.ஜா.வின் சிலேடைகள்’ என்ற நூலைத் தொகுத்தவர்: தினமணி'யில் பணியாற்றினார்.

தா-14