பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - 218

1:7-10-29இல் தமக்கு உதவியாக, திரு. வி.மு.சு-விடம் சொல்லி இவருக்கு எழுதுவித்த இக்கடிதத்தில் ஐயரவர்கள் கையொப்பமிட்டுள்ளார்:

ஆசான் - மாணவரிடையே கடிதப் போக்குவரத்து

ζά

சிவமயம் வி. சாமிநாதையர் தியாகராஜ விலாஸ்” சென்னை திருவேட்டீசுவரன்பேட்டை

I 7-10-29

அநேக ஆசீர்வாதம். - உபய rேமோபரி. தாம் 16 - ஆம் தேதி எழுதிய கடிதமும், அதற்கு முன்பு எழுதிய கடிதமும் வந்தன. பார்த்து நானும், பிறரும் மிக்க ஆறுதலடைந்தோம். -

தேக்கயாகப் பரணி” யின் அகராதி வேலை நடை பெற்று வருகின்றது. 49-ஆம் பாரம் இன்றோடு முற்றுப் பெறுகின்றது. அதில் க” பாடம் என்பது வரையில் வந்திருக்கின்றது. மேலே அடுக்கி வருகிறார்கள்.

இடையில் சில தினங்களாக அஜீரணத்தால் ஆகாரம் செல்லவில்லை. அ த னா ல் மெல்லிய ஆகாரத்தை உட்கொண்டு செளக்கியமாக இருந்துவருகிறேன்.

அருமைத் தந்தையாரவர்கள் முதலியவர்களுக்கும் மற்றவர்களுக்கும் என் ஞாபகம் சொல்லவேண்டும்.

சிரஞ்சீவி அண்ணா முதலியவர்களுக்குத் தம்முடைய நமஸ்காரம் முதலியவற்றைத் தெரிவித்தேன்.

அன்பர்களிருவரும் வழக்கம்போலே உடனிருந்து இயன்ற அளவு சகாயம் செய்து வருகிறார்கள். -

அங்கே சில தினம் இருந்து தேக ஸ்திதியை ஜாக்கிரதை யாகப் பார்த்துக்கொண்டு செளகர்யமான காலத்தில் வருவதை எதிர்பார்க்கிறேன். -