பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் . - 228

கடைக்காரர் சிரி த் து க் கொண் டே, படிக்கத் தெரியாது என்றால் மூக்குக் கண்ணாடி போட்டுக் கொண்டாலும் உம்மால் படிக்க முடியாது’ என்றார்.’

பூரீமத் ஜயர், இந்த கதையைச் சொல்லி இவர்களைச் சிரிக்க வைப்பாராம்.

ஆயினும் இதன் உள்ளுரையாக, படிக்கக் கற்றுக் கொள்ளாமல் நூல்களை எடுத்துக்கொண்டு போய் வைத்துக்கொள்வதால் உங்களுக்கு அது பயன்படப் போவதில்லை’ என்கிற கருத்து இவர்களுக்குத் தெளி வாகப் புலப்படுமாம்.

ஆசானிடம் கேட்டவை

அதுபோல இவருக்கு நன்இால்: அகப்புற இலக்கண் நூல்களைப் பாடம் சொல்லத் தொடங்கிய ரீமத் ஐயர் ஒரு நாள் சில அரிய உபதேச மொழிகளை வழங்கினார். அதையும் தம் ஆசிரியப்பிரான் :பிள்ளையவர்களது

வாழ்க்கை வரலாற்றைச் சொல்வாரைப் போலச் சொன்னார்.

黨 X. - X

சிலர் இ ள ைம யி லே யே இயல்பாகக் கவி புனைகிறார்கள். சிலர் பேசுகிறார்கள். சிலர் பாடு கிறார்கள். இவையெல்லாம் சரஸ்வதி கடாட்சத்தால் அமையக் கூடும். அதைக்கொண்டே தம்மைப் பெரிதும் வியந்துகொண்டு இருந்துவிடுபவர்கள் வாழ்க்கையில் சோபித்தது இல்லை. தம்மிடத்து அமைந்துள்ள ஆற்றல் முழு வளர்ச்சிபெற அந்த அந்தத் துறையில் வல்லுநர்களாக உள்ளவர்களை அணுகிப் பாடம் கேட்க வேண்டும். படிக்கவேண்டிய நூல்களை யெல்லாம் படித்துத் தெரிந்துகொள்வதில் ஊக்கம் உடையவர்களாக இருக்க வேண்டும்.

  • கி.வா.ஜ. சொன்னது.