பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227 - நாம் அறிந்த கி.வா.ஜ.

மதிப்பையும், .ே ப ர ன் ைப யு ம் புலப்படுத்துவதாக இருக்கிறது.

புத்தக இரவல்பற்றி ஆசான் அறிவுரை

இவர் சென்னைக்குத் திரும்பி வந்தவுடன், படிக்கிற காலத்தில் சொற்பொழிவு ஆற்றப் போவதில், கவிதை கட்டுரை எழுதுவதில் அளவுக்கு அதிகமாக அதே நினைவில் செயல்படுவது எல்லாம் கூடாது” என பூரீமத் ஐயர். நேரிடையாகச் சொல்லவில்லை. எதையும் பிறர் மனம் புண்படும்படி சொல்வது அவரது இயல்பும் அன்று.

பூரீமத் ஐயரிடம் சிலபேர் வருவார்களாம். போகிற போது புத்தகம் எதையாவது எடுத்துப் போய்விடுவார் களாம். எடுத்துக்கொண்டு போனதைத் திருப்பியும். கொண்டு வந்து வைக்கமாட்டார்களாம்.

ஆகவே, தம் வீட்டிற்கு வருபவர்களிடம், “இங்குள்ள நூல்களை எடுத்துப் போய்விடாதீர்கள்’ என நேரிடை யாகச் சொல்வதற்குப் பதிலாக மறைமுகமாக ஒரு கதையைச் சொல்வாராம்.

“கிராமத்திலிருந்து ஒரு வ ர் வ. ந் தா ர். அந்த . வீட்டுக்காரர் தினத்தாளை மூக்குக் கண்ணாடி போட்டுக் கொண்டு படிப்பதைப் பார்த்தார். உடனே இவரும் கடைக்குப் போய் ஒரு மூக்குக் கண்ணாடியை வாங்கிப் போட்டுக்கொண்டார். படிக்க, தினத்தாளை எடுத்துப் பார்த்தார். படிக்க முடியவில்லை.

என்ன ஐயா இது! அவர் மூக்குக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு படிக்கிறார். என்னால் படிக்க முடிய: வி ல் ைல’ எ ன க் கடைக்காரரிடம் சண்டைக்குப் போனாராம். -
ஐயா, உமக்கு ஏற்கனவே படிக்கத் தெரியுமா?” என்று கடைக்காரர் கேட்டார். வந்தவர், தெரியாது” என்றார்.