பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.31 - நாம் அறிந்த கி.வா.ஜ.

அந்தக் கடுக்கன் ஜோடியும், புலவர் பெருமான் பிள்ளை யவர்கள் காந்திமதி பிள்ளைத் தமிழ் இயற்றி, அரங் கேற்றிய காலத்து அன்பர்களால் அவருக்கு வாங்கியளிக்கப் பெற்றதாகும்.

கீழ்வேளுர்ச் சுப்பிரமணிய தேசிகரை வரவழைத்து அவரிடம் இலக்கண விளக்கம், யாப்பருங்கலக்காரிகை” *நன்னுால் விருத்தியுரை, திருக்குறள் - பரிமேலழகர் உரை போன்றவற்றைப் பாடம் கேட்க அந்தக் கடுக்கன் ஜோடியை விற்றுப் பணமாக்கிக் கொடுத்தார். தேசிகரது கைப்புத்தகத்தில் அவருடைய மாணவர்கள் பெயர் வரிசையில் தம் பெயரையும் எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்தார், பிள்ளையவர்கள்.

இவ்வளவு ஏன்? தமிழ் நூல்களில் பழக்கமுள்ள ஒருவர் ஏதோ வாழ்க்கையில் ஏற்பட்ட வெறுப்பினால் பரதேசியானார். அவர் அப்போதும் தாம் பயின்ற தமிழ் -தால்களிடத்து வெறுப்படையாமல் தம்முடைய சுவடி களைத் தம்மிடமே ஒரு துணியில் சுற்றி வைத்துக்கொண்டு திரிந்தார். யாரையும் ம தி ப்ப தி ல் ைல; எவரையும் தம்மிடம் பேச நெருங்க விட்டதில்லை. கஞ்சா அடித்து விட்டு எங்கேனும் படுத்துக் கிடப்பார். பசியெடுத்தபோது எவர் வீ ட் டி லா வ து அ ன் ன ப் பி ட் ைச எடுத்து உண்பார், -

அந்தப் பரதேசி தண்டியலங்கார'த்தில் அதிகப் பயிற்சியுடைய்வர் எனத் தெரிந்துகொண்ட புலவர் பெருமான் பிள்ளையவர்கள் சில காலம் அந்தப் பரதேசி -யின் பின்னாலேயே சுற்றியிருக்கிறார். அவர் பிட்சை எடுக்கப் போகும்போது அவருடன் கூடவே போயிருக் கிறார்; அவருக்கு வேண்டிய கஞ்சாவை வாங்கிக் கொடுத்து அவரது அன்பையும் பெற்று, அவரிடம் தண்டியலங்காரப் பாடம் கேட்டார். அவருடைய