பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் . . . 232

கவடியை வாங்கித் தாமும் ஒரு பிரதி எடுத்துக் கொண்டார்.

இப்படி அவரவர்கள் விருப்பப்படி ஒழுகியேனும், பொருள் உதவி செய்தேனும் பிறரிடம் பல நூல்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள மகாவித்துவான் பிள்ளை பவர்கள் கொண்டிருந்த ஆர்வம், :புராணப் பிரசங்கம் செய்ய வேண்டும், கவிதை எழுத வேண்டும்’ என்கிற அவரது இயல்பான ஆர்வத்தையும்விட அதிகமாக இருந்தது. -

இப்படி, இன்று அறிந்த விஷயங்கள்: என்ற தலைப்பில் ரீமத் ஐயரிடமிருந்து பிள்ளையவர்களைப் பற்றிய செய்திகளை அறிந்தவுடன் இவரே சிலவற்றைத் தம் நாட்குறிப்பில் எழுதினார்.

சென்னையில் தாம் தனியறையில் இருந்துவருவதால் இரவிலும் பகலிலும் அதிக நேரம் பூரீமத் ஐயர் பாடம் சொல்லுகிற நூல்களை நன்கு பயின்றார். சொற். பொழிவு ஆற்ற வேண்டும், கதை எழுத வேண்டும் என்கிற தம் சொந்த விருப்புக்கு ஆசிரியருடன் இருக்கும் காலத்தில் இனி இடமளிப்பதில்லை எனவும் இவர் உறுதி பூண்டார்.

翼 。 -- 懿 X.

பிற்காலத்திலும், கதை கவிதை எழுதும் ஆற்றலும், பேசும் திறனும் உடைய இளைஞர்கள் தம்மைப் பார்க்க வரும்போது, நீங்கள் என்ன படிக்கிறீர்கள்?” என்று கேட்டு, அவரவர் விருப்பு, சமய உணர்வுக்கு ஏற்ப, -இன்ன இன்ன நூல்களைப் படியுங்களேன்! படித்துக் கொண்டே இருக்க வேண்டும்; எழுத்தாளராக விரும்பு கிறவர்கள் நண்பர்களுக்காவது அடிக்கடி கடிதம் எழுதிப் பழகிக்கொண்டே இருக்க வேண்டும்’ என இவர் அறிவுரை வழங்குவது உண்டு. – , ,

X 翼 x