பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233 தாம் அறிந்த கி.வா.ஜ.

இவருடைய ஆசிரியப்பிரானும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சமஸ்யை கொடுத்து இவரைப் பாடல் எழுதச் சொன்னார். தம் ஆராய்ச்சிப் பணியினால் உண்டாகும் அலுப்பைப் போக்கிக்கொள்ள, எப்போதாவது சில இடங்களுக்குப் பேசப் போகும்போது, இவரையும் தம்முடன் அழைத்துச் சென்று பேசச் சொன்னார்.

X. X x மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீடு செக்தமிழ் பற்றி:

மதுரைத் தமிழ்ச் சங்கச் செயலாளராகத் திருவாளர் டி. ஸி. சீனிவாசையங்கார் இருந்தார். அவரை டி. ஸி., என்றே குறிப்பது வழக்கம். அவருக்கு ரீமத் ஐயரிடத்தில் மிக்க ஈடுபாடு உண்டு.

ஒரு முறை டி. வி., தம் நண்பர்களுடன் சென்னை வந்திருந்தபோது தியாகராஜ விலாசம்’ வந்திருந்தார். அப்போது அவருடன் பழக அன்பர் கி.வா.ஜ.வுக்கு வாய்ப்புக் கிடைத்தது.

பூரீமத் ஐயரின் கட்டளைப்படி இவர் வந்தவருக்கு ஏட்டுச் சுவடிகள், கையெழுத்துப் பிரதிகள் ஆகியவற்றை ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டி விளக்கினார். -

மதுரைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தவர் ராமநாதபுரம் பாண்டித்துரைத் தேவர் ஆவர். அவர் பல தமிழ் நூல்களை வெளியிட்டதோடு, செந்தமிழ்’ என்னும் இலக்கியப் பத்திரிகையையும் வெளியிட்டு வந்தார்.

மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக வெளி வந்துகொண்டிருந்த அந்தச் செந்தமிழ் மாதப் பத்திரிகையில் வெளியிட, குருபரம்பரா கையெழுத்துப் பிரதியை, தம் குறிப்புகளுடன் பூரீமத் ஐயர் அப்போது டி. ஸி., அவர்களிடம் கொடுத்தார் - .

மதுரைத் தமிழ்ச் சங்க ஆண்டு விழாவுக்கு வருமாறு பூரீமத் ஐயரைக் கேட்டுக்கொண்டார். டி. ஸி. அவர்கள். இவரையும் ரீமத் ஐயருடன் வரும்படி அழைத்தார். தா-15