பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - 234

8 - 12 - 1929 அன்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 28 - ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. அதற்கு பூரீமத் ஐயருடன் இவரும் சென்றிருந்தார்.

கனம் நார்மன் எட்வர்டு மார்ஷ்பாங்க்ஸ் என்கிற ஆங்கிலேயர் அப்போது சென்னை மாநிலக் கவர்னராக இருந்தார். ஓரளவு தமிழ் தெரிந்தவர். அவர், முதல் நாள் விழாவுக்குத் தலைமை ஏற்றார்.

கவர்னரை வாழ்த்தி ஒரு பாடல் பாடும்படி டி. ஸி., அவர்கள் இவரிடம் கேட்டுக்கொண்டார். அவர் விரும்பிய படியே சந்தப் பாட்டாக இரண்டு வாழ்த்துப் பாக்களை இவர் பாடியதுடன் அந்த வரவேற்புப் பத்திரத்தை விழாத் துவக்கத்தில் இவரே வாசித்தளித்தார்.

அடுத்து, சேது சம்ஸ்தான ஆஸ்தான வித்துவான் ரா. ராகவையங்கார் வரவேற்புரை நிகழ்த்தினார்.

குட்டையும் நெட்டையும் இல்லாத உயரம்: பருமனும் ஒல்லியும் இல்லாத வடிவம்; சிவப்பான திருமேனி, காதில் கடுக்கன்; திருமேனியில் சட்டை, தலையில் சால்வையையே தலைப்பாகையாகக் கட்டிய கோலத்தோடு-கையில் குறிப்பு ஏதும் இல்லாமல், அருவிபோல வாய்மொழியாகப் பேசிய அவரது பேச்சில் இவர் சொக்கிப் போனார்.

அவரோ தமிழில் கரையைக் கண்ட புலமையை உடையவர். சோழப் பெருமன்னர்களாகிய விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன் என்ற மூவருடைய அவைக்களப் புலவராகவும் ஒட்டக்கூத்தர் விளங்கினார்; மூவருலா, தக்கயாகப் பரணி” போன்ற பல நூல்கள் ஒட்டக்கூத்தரால் எழுதப்பட்டவை ஆகும்.

அதுபோலவே ரா. சா. க ைவ யங் கார் சேது சம் தைானத்தில் பாஸ்கர சேதுபதி, ராஜராஜேசுவர சேதுபதி, நாகநாத சேதுபதி என்ற மூன்று மன்னர்களின் பேரவையையும் அலங்கரித்த ஆஸ்தான மகாவித்துவான் ஆவார். ராஜராஜேசுவர சேதுபதியின்மேல், நாணிக் கண்