பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதைத்தல்’ என்ற துறையில் 400 பாடல்கள் அமைந்த ஒரு துறைக் கோவையைப் பாடியிருக்கிறார். *

தமிழ்ச் சங்கத்தின்மூலம் வெளியான செந்தமிழ்’ப் பத்திரிகைக்கு அவர் ஆசிரியராகவும் இருந்தார். அவரை யாவரும் பெரிய ராகவையங்கார் என்றே சொல்வார்கள். தமிழ்ப் பேரகராதி அலுவலகத்தில் பணியாற்றிய மு. ராகவையங்காரைச் சி ன் ன ரா. க ைவ ய ங் கார் என்பார்கள். இருவரும் உறவினர்கள்.

பெரிய ராகவையங்காருக்கு ரீமத் ஐயரிடத்தில் அளவிடற்கரிய மதிப்பு உண்டு. அதுபோலவே பூரீமத் ஐயரும் அவரிடத்து மதிப்பு வைத்திருந்தார். -

என் ஆசிரியர் பெருமானைத்தான் மகாவித்துவான் என்று கூறி மகிழ்வேன். இன்றுமுதல் இவரையும் மகாவித்துவான் என்று சொல்லி இன்புறுவேன்’ என துரீமத் ஜயர் ஒரு மாபெரும் சபையில் சொன்னதிலிருந்து அவரை யாவரும் மகாவித்துவான் ராகவையங்கார் என்றே வழங்கலாயினர். -

x ! x - X பாரி காதை பாடிய மகாவித்துவான்பற்றி :

அன்பர் கி.வா.ஜ. அவரை ஏற்கனவே நன்கு அறிவார். சேது சம்ஸ்தான மன்னர் பட்டாபிஷேகத்திற்கு (16 8 - 29) பூரீமத் ஐயருடன் இவர் முகவை போயிருந் தார். அப்போது பெரிய ராகவையங்காரின் வீட்டிலே தான் தங்கினார்கள். அவர் வெண்பாக்களாலான பாரி காதை” என்ற நூலை இயற்றியிருந்தார். பூரீமத் ஐயர் அதைக் கேட்க வேண்டுமென்பது அவர் விருப்பம்.

முகவையில் இவர்கள் தங்கிய இரண்டு மூன்று நாட்களுக்குள் இவர் பாரி காதை'யை பூரீமத் ஜயரூக்கு வாசித்துக் காட்டினார். ராகவையங்காரும் இவர்கள் கூடவே இருந்தார். ... . . -

.-مowمسمم

  • சிவபுரி சன்மார்க்க சபை,